ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகள் குருபூஜை
சுவாமிகளின் குருபூஜை வருடந்தோறும் ஆடி மாதம் பொளர்ணமி திதி உத்திராடம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து வருகிறோம். அன்றைய தினம் வருகை தரும் அடியார்கள், பக்தர்கள், அன்பர்கள் அனைவருக்கும் அன்னதானம் செய்து வருகிறோம்.
குருபூஜை செலவுக்காக சுவாமிகளின் வம்சா வழியினர் மற்றும் பக்தர்களிடம் நன்கொடை பெற்று சிறப்புற நடத்தி வருகிறோம்.
ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் குருபூஜையினை (திரு ந. காளிதாசன், தமிழ் நாடு மின்வாரியம் - அவர்களின் புதல்வர்) திரு கா. ஜோதி சொரூபானந்தன் பல வருடங்களாக தலைமையேற்று நடத்தி வருகிறார்.
இன்று 30/07/2015 – 144 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment