குகானந்தலகரி

குகானந்தலகரி
1
சிகையிருந்த பசுமயினடாத்து பரதீரசம்பரம வெண்ணிருதயக்
குகையிருந்து குகநாதனென்று பெயர்கொள்ளமட்டு மனமுண்டலாற்றே
பகையதாயதனுணீ டுகாரிருளதேகமட்டுமொருபணிசெயாய்
தகையதீபமிடவேண்டுமென்று சொலியிடுவதோ நினது தகையதே.
2
வேயிருந்து முடல்வாயுடைக்கடவுள் வேதனிந்தினொ டேனையோர்
வாயிருந்து வருமுறைகள்கொண்ட பயமுதவுசெந்திலுறை வள்ளியோய்
நீயிருந்தும் வரமயிலிருந்தும் வடிவேலிருந்தும் மலநீர்மையாற்
றாயிருந்து முலைவேட்டழுங் குழவியாயினேனிது கொல்தன்மையோ.
3
போதவார்த்தைசொலல் கொண்டு நல்லருள் செய்வதனமொன்றஃது போக நான்
மாதர்போல நெடுவிரகவார்த்தை சொலல்கொண்டு நல்லருள்விளங்கிடக்
கோதையாரிருவர் தம்மை வேட்டவொருகுண முகம்பிறிதுவைத்துளான்
வேதமோதுகுக ணவனையல்ல தினியாரை மேவுமென்விருப்பமே.
4
குமுழ்முலைச்சிறிய குறமின் மேவிடுகுகாதி பாநினது கோயினிறிற்
கமழ்வதும் பணியர்கூட்டி வாரியொரு கடைகுவிப்பது நின்வாயிருந்து
துமிழ்வதும் பரமஞானமென்னிலிவனோ தித்தாவெனவிரந்து நான்
றமிழனந்தமுறை செய்தனன் மடமைதக்க நீயது பொறுத்திடே.
5
சீறுமூச்சையொபந்தனஞ் செயவுமறிகிலேன் சிவசிவானேன்
வேறுவேறு பலநூல் படித்ததிலுமெய்மைகண்டறியன் குவற்குகா
ஆறுமாமுகமுமாறு கொண்ட தினியந்தகண்படரு நாளினுங்
கூறுபோதிலுளமெங்ஙனுவேதனை யறிகிலேன் குறுகுகின்றனே.
6
நாமரூப மிடமேதுமற்ற நினைநங்குகா குமரசண்முகா
காமனிற்பெரிய செந்தினாதவெனவில் புகழ்ச்சியது கழறினேன்
யாமிதாகமென வோதலாஞ்சிறியனெத்திலாகி நினையிந்தெனு
ளாமடத்தினையுபோற்று வந்தையிதிலியாவர் மிக்கரணிவேலரே.
7
வாட்டமுற்றவெனை மடியிருத்திமணநறிய பாலடிசில்வாயிடத்
தூட்டவுண்டபின்னு றங்கவைக்க விருதாயர்வேண்டுமென வுன்னிமுன்
வேட்டுவக்கொடியை வானமங்கைதனை வேட்டுநின்றநிறை விமலமே
மூட்டமாயை வசம்விட்டதேது குறையேது செய்தனதை மொழிவையே.
8
முந்தைநாளின் மறைமுடிவதான பரஞானமோனமொழி மூர்த்தனை
அந்தநன்னிகம சாகைதற்கு மயலாகிநின்றருள் விசாகனை
சந்திலோர் தொழிலுமற்று நிற்பவனையவரொடொப்பனெனவதிசய
மெந்தநூலுதவி செய்ததோ வறியனெண்ணிலீரஃதையெண்ணுமே.
9
தெவ்வராமைவரை வென்றபேத கதிசென்று தேயந்தகமதற்றிடு
மவ்விடத்துவெளியாகி யெங்குமுளதன்மை காட்டிடுகுகாநினை
இவ்விடத்துள வனவ்விடத்துளவ னென்றிசைத்தனரிசைப்பினும்
உவ்விடத்துமுள னென்றிடார் களெனிலென்னதாகுமிவர் கன்மமே.
10
புண்படுத்து மடநெஞ்சினோடலையு மென்னையங்ஙனொருபொருளதாய்ப்
பண்படைத்த மறைமுடிவையோதியது மாகுகாதிபதிநீயலால்
மண்படைத்தவனு மண்ணையுண்டவனு மாதிடத்துவ னுமாயிரங்
கண்படைத்தவனுமில்லையென்றறியுமுலகமாகாகனமுகடுமே.
11
வித்திருந்து முளைவருமுன்னுண் முளையவ்விடத்திலுறு முறைமைபோல்
நித்தாதியொட நாதியென் பவைகணின்னிடத்திலுல ளகாலமென்
நுத்தமப்பெறியர் கண்டுமேற்பதவியுன்னி நின்றிடுவ ரெம்மனோர்
பித்தராகிமன நொந்தலைந்திறுதி பெறுவதுங் கொடியபிரமமே.
12
அன்பிடைப்பகுதி நொடியினிற் சகசமறியலாமெனு மறுமுகா
பின்புனுற் பவமதமறியும்விஞ்சையது தருதிநான்பி உமமென்றிடும்
வன்பர்பின் வரலையறிவனோதிடுவனவரும் நோக்கி மனநாணுவார்
இன்புசொற்றிடினு மேற்பரந்நிலைமை யெய்துதற்கு மனமாவரே.
13
நாள்மறைத்துணி வையாவரோதுபவரோத வென்றுவரில் நங்குகா
சூன்யமன்றதுநி சூன்யமன்று மலதொந்தமாயை மயலற்றிடு
மான்மியத்தர் குருபாதமேகதி யாதாயிரங்குவது மன்னிடும்
பான்மைமோன மயமவர்கண்மட்டின் முளம்வாரி முத்தமிடநிற்பதே.
14
பொன்பதிப்பவரை மோன ஞானநெறி போயிடாக் கொடியபொய்யரை
என்குலக்குரவ ரென்றிடாது சுரரைந்தொழிற்றலை வரியாவரும்
தன்குலக் குரவனென்னுநீ யெனதுகுருவதாகி யருள்தந்திட
முன்படைத்த தவம்யாததோவறியன்முருகநாத குகமூர்த்தியே.
15
பற்றுணர்ந்தெளிய பற்றைவிட்டுழல்வர் பற்றிநிற்கு முனதருளதைப்
பெற்றனென்று மதினின்றனென்று மெதிர்பேசும் டம்பமொழியென்றுபோம்
உற்றுணர்ந்தவர்கள் மாதரல்குலிழிகுழியையா வுறவுகொள்ளுவார்
இற்றனின்று மிரவேயிருந்துன ருளென்குகாதருண மீய்ந்திடே.
16
கிட்டியிரிருகை கால்களைத்திருகிவைத்துக் கீறுதுணி கொண்டதைக்
கட்டிநீழ்விழியை மூடியப்பிவிதிகண்ட யூரவர்கள் பைங்கிளை
வெட்டியிட்ட திலோர்பாடைக்கட்டியதின் மீக்கிடத்திடுமுன் மின்னனார்
முட்டியிட்டழு முன்வந்துநின்ன ருள்செய்மோனம்வைத்த குகநாதனே.
17
சினையதாஞ்செழிய மாவில்வேற்கடவுள் செய்கை கண்டுநினைவந்தியா
மனமெனுங்கொடியதருவில் வேல்விடுவையென்று வந்தனன் மனம்செயாய்
அனையமாவடலில் மஞ்சை கிட்டியதுபலாமுண்டி தனையட்டிடி
லென்கிடைக்குமென வெண்ணமோலறிய னென்குகா வில்தென்மொழிவையே.
18
தங்குடிக்கினிய மதலைவேண்டினர்கள் சங்கபரணிமுதன்மற்றுளோர்
எங்குலக்கு மரியாகியுமதனை யெண்ணியே நினைமுனீய்ந்துளான்
நங்குடிக்குமொரு மதிலைவேண்டுமென நினைவிலாதெனை வெறுத்தனை
தங்குமென் குமரபின்ன ரெண்ணிடு வைதாயரோடு மெனை நேடியே.
19
மறமிகுந்த கொலை மிருக நீடு நெடுவன மதேயெனது மனமதைக்
குறமினைத்தழுவு குரவனல்ல தினயாவர் கூடுபவர் குறைவிலோய்
அறமுரைக்கு பவரோடுரைக்கிலவர் வருவரோவரினு மூப்பினர்
திறமதாயருள் கொடுறை திவேட்டமுள செய்யலாங் குமரதீரனே.
20
ஓடுகின்றனர்கள் சாடுகின்றனர்களுள்ள வொன்றினை யிழந்ததாய்
வாடுகின்றனர்கள் மீட்டும் வந்ததென மகிழுகின்றனர் களம்மமா
ஆடுமானவயிவர் மீதிலேது குறையந்த மாயை தருவலியதா
மூடயிவ்வுலகினோடு கூடுகிலன் முருகனே முகிலன் மருகனே.
21
அடியன் மீதிலுள பிரியமிக்கொடிய மனதின் மீதும் வரிலையவென்
குடிகெடுத்து விடுநினை மறக்கவநு கூலயுக்தியுமியம்பிடு
முடிவின் மெல்லமெல நின்றனோடு சமனென்று மோதுமிதை முடி கொள்வாய்
துடியிடைச் சிறுமி மன்னபின்வரவு சொல்லினேனுனது சித்தமே.
22
கொலை புரிந்துபூலும் வக்ரதந்த மடமறலியே நமது கூறல் கேள்
சிலையிடைக் கொடிய வாளியானெடியவேலினாற் கரிய சிங்கியாற்
றலையடுத்த மதயானையாற்றின முனநந்து சாம்பியோர் குடும்பெனும்
யலைபுகுந்தவரையடுவதா நினது வலிமை யெங்ஙனுளவலிமையே.
23
தேர்ந்தநற்பரமஹம்ஸர் சித்தர் கணர்தேவர் மற்றுளவரியாவரும்
ஆர்ந்திருக்கு மிருபதமதே புனையாதாக வேண்ணியுனையணுகினேன்
சேர்ந்த நான்மறைகளெட்ட வெட்டுநிரை தேசுளாய்குமரதேசிகர்
சார்ந்தபின்னரயல் பேர்ந்திடாதவொரு சத்ததான நிலையருள்வையே.
24
கல்லெனிற் கரிய விருளெனிற் சலனக்கடலெனிற் கொடிய தருவெனிற்
கொல்லுபூதமெனில் வேல்விடுத்தடுவையென் குகாவிதனு ளொன்றெனச்
சொல்லொணா மனதையெங்ஙனீயடுவை சொல்லலும் பயனில்சொல்லதாம்
வல்லவீதினுடனெந்த நாள்வரையும் வாழவேண்டுவது கூறிடே.
25
குன்றவில்லிதரு பாலவென்றனொடு கூடவாகடிதின் மனமெனும்
பன்றியுள்ள தகமத்தமாவுளது புத்தியான படவரவுமுண்
மென்றுசித்தமெனும் நாயுமுண்டவைகளோடு கூடிவிளையாடலாம்
இன்றுதாழ்ப்பையெனி லவைகளேகிவிடுமே குவாரெவரி ருப்பவரே.
26
ஏதுமென் முனுறுலில்லதுள்ள தெனயாது மெண்ணுகிலேனென்குகா
நாதநீமுன் வரிலங்கனெண்ணனதை நனவில் வைத்தவொருசெயலதா
யாதரிக்குமுனம் வரவுசெய்தையிலை யாதகா தருளிலுயத்தவோர்
போதகன்றனை யுமங்ஙனெண்ண வரினல்லதாமெனது போதமே.
27
கர்த்ததந்திர மொழியாறுணின்றிடு கெளமாரமன்னெனது மதுமிகப்
பத்திசெய்துருளடைந்து தோய்ந்து பதனங்கடந்தவை யியற்றிடுஞ்
சுத்தமாயை வலிகண்டு மேலகமிரண்டுமற்ற சுகவடிவமாய்
மத்தயானையென நிற்பதேயெனது மதமதாங்கு மரமன்னனே.
28
குரவனாரடிமை யென்ன வின்றுவரை கூறிவந்திடு வழக்கினாற்
பரமவென் குமரவென் முனாவருதியென்று கூறியிசையாடினே
னிரதமின்னிலையினீ யிருத்தியெனிலியாவரே யுனையுநினைகுவார்
வருதல்போதலென லிலையெனிலிவனும் வாடல்கூடுதலு மில்லையே.
29
பழிகினின்னிருபதாம் புயங்கிருபை பண்ணுமென்ன நெடிதெண்ணியே
தொழவிருந்தெனுளம் வேறுபட்டதினி யென்செய்வேன் குமரசுந்தரா
இழவுகொண்ட வுலகோடிருப்ப மெனிலேற்றிடா திசைவுமில்லைநொந்
தழுவிருப்ப மெனிலாவியில்லையிவணது பவிக்கினு மனர்த்தமே.
30
வானர் மாமகுடபந்திதள்ளிமுனம் வருவதில்லைபத்ம வாய்களோ
மோனமோது மலதென்று வந்தையென விடாது முகவிழிகண்மே
லான பக்குவர்களெங்ஙனுள்ளரென நேடிநிற்குமல தருள்செயா
தீனமுற்றபுழு நாய்க்கியாது கதியாரெனக் குறவுகுமரனே.
31
தப்பனேனு மொருபுலவனென்ன மிகுடம்பனென்ன விடுநாமமுஞ்
சுப்பராயனென வோதலாற் பரமசுப்பராய கருணாநிதி
முப்பொருத்த முளதெற்கு நிற்குமினியெவ்வழக்கிலுள முனிவதா
மப்பனின்னருளையடைய மோருறுதியடிமை கண்டனி னியஞ்சேனே.
32
இங்குவந்திடுக வருள்புரிந்திடுக வென்னிலேன்முதுபிதாமகர்
மங்கை கூறுடையரோனும் வந்திடுவர் வலிமிகுந்த வொருமரணாய்
எங்குமொட்டியுமோ ரொட்டிலாதுறை நிர்லேபனாயிவணிருந்துமென்
னங்கநொந்து விழிநீர் பெருக்குவன் முன்வந்திடாய் மிகவுமழகிதே.
33
தமசைவெல்லவருஞான் மேவவொரு சாதனங்களு மில்லாததாற்
சமசுகாதிபர்கள் தமசுமுப்பொழுதுமில்லை யென்றிடுவர் சரதமாய்
மமஷடானனவகத்தை மாற்றிடுநிரகமுமோரகமே யானதால்
நமதிடத்தஃதிரண்டு மில்லையென நிற்பர்நின் னருனாட்டரே.
34
பகமறந்திருப யோதரத்தினிடைபடன் மறந்து சமதீயிலாஞ்
சுகமறந்ததை மறந்த மென்றவொரு சொலுமறந்து பலதோற்றமாஞ்
செகமறந்து இரவுபகன் மறந்திடுதிகம்பரற் குதவுமறுமுகா
யுகமறந்திடினு மென்முன்னாவை யெனிலில்லையேது தவமுடையனே.
35
தேவநாயக னீதேவயானையிவணேர் பொருந்தியது தீம்புனப்
பாவை வள்ளியிடு பணியுமுற்றிவர லெப் பொருத்தமதினன்றியிரு
காவதோதிடுவள் பெரியவம்மை யிவளதுவுமேகிலளிவளக
மேவலின்றியிரு குமரநின்மலவிராக நிற்குண விலாசனே.
36
என்றநல்லுறவரென்னி லென்பகைவரென்னி லென்குமர மகிழ்வுட
னின்று முன்னிடுவையாது யுத்தியெனிலிகல் விழைத்திடு பகைஞரைக்
கொன்றுவென்று வருவீரமேநினது குணமதாக வினியன்றியும்
அன்று செந்தினிடைசூர் முடிக்க வலதியாவர் வாழ்நீதிடவமர்ந்
37
கங்கை தும்பைமதிமத்தம் வாளரவுகழய கொன்றையணி வோரருள்
துங்கவேலகுருநாத வென்னவொரு சுருதிகாண்பரிய பொருனெனக்
கங்கைபுத்ரனெனவாயி மைந்தனென வள்ளியாள் கணவனென்னநான்
அங்கநொந்துனை யழைத்தும் வந்தையிலை யாவனென்னில்மனமாமே.
38
சரதமாக நினைநம்பியுள்ளுருகியன்பு செய்யிலொரு சரதமுஞ்
சுருதியின் பொருளும் முபநிடத்துணிவு மெளிதினீசொலுவதெண்ணிடார்
பிரதிபிம்பமென பிம்பமென்ன கடபின்ன மென்ன விவனோதியே
வரையறுத்தநெடுநாளை மாய்ப்பர்கு கவென்கொலோ இவர்தம்மதியதே.
39
இதையுணர்ந் தவர்களதையறிந்திலர்கள தையுணர்ந்த வியல்பாளரோ
சிதையுமிவ்வுலகையறி கிலாரிவர்கள் சேருமோர் கதியுமலளவரஞ்
சுதைபரந்த மொழிமறமினைத் தழுவுசுமுகநாத குகசுந்தரர்
அதையும் விட்டிதையும் விட்டிடைப்பிணமதாயின் யாதுகதியருள்பையே.
40
பொன்றுமிவ்வுலகர் மொழிவர் வல்லபடிபுதியரான சிலவறிஞரு
ஒன்றுமில்லைவணென்று தான்மலைவரொன் றுமற்றநின்னிடத்தெலாம்
நின்ற தன்மையதையறிகிலார்குமரநீசொலாதொயிலறிவதார்
அன்றியுங்குறியவிழ்ந்துபோனவிடமளவுகட்டவிடமில்லையே.
41
ஒன்றுமற்றதனை நம்பிவாழுபவனொன்று மற்றவனேயலா
லின்றுநாளைமுன் மன்றுளானெனவிசைக்க நின்றிடுவ னல்லவாம்
குன்றையட்டவடிவேலவா மருவுகுறிகடந்த வொருகுறியதாய்
யென்று வாழவலனிவ்வுடன் முடிவிலெய்து மென்பவர்கள் காணவே.
42
முடிவிலா நினதுவடிவமுண்டஃது முன்னிற்கு முகமாறுடன்
படியின்மீது வரவேண்டுமென்ப திலையங்ஙனம்பகர நின்றதும்
அடியர்முன் குரவர்வந்துவார்த்தை சொலல்வடிமை நானிடையினின்றதாயக்
கொடிய விவ்வுலகமேசுகின்ற வசைகொண்டுதான் குமரமன்னனே.
43
ஓடியாடி வருகாளையம் பருவமேகி யூடுநரைவந்தது
ஆடுகின்ற வுளபற்களைம் பொறியராவரங்குவழி மெல்லெனத்
தேடுகின்றனர்பின்நாளை யெண்ணின் மலதேகமாய்ந்திடு மோர்நாளதே
யீடதாயுளதிங்கென் செய்வேன் குமரவிதனுளியாது பெறவல்லனே.
44
நினையும் விர்த்தியதிலிட்ட முள்ளபடியுற்பவித்து வருநிலையினு
மினையணாதியெனவனை யுனாதியென விங்குவேண்டுவது மழையதாம்
தனையர்வேண்டுவன வேண்டினுமினியதாய ரென்னின் வழிவருதல்போற்
றுனதுசித்தமெதில தியெனிஷ்டமுள தோதினேன் குமரநாதனே.
45
என்றணெண்ண முனதெண்ணமா குமதிலென்றனெண்ணின் வநியொன்றுமுன்
னின்றுளு தொழியிலாண்மையார்க்குளது நின்றனக்குளது சரதமால்
பொன்றுமிவ்வுடலமேனு நீயினிது போந்திடு முறையுளானதாற்
கன்றிமாய்வதுவு மறமதன்று குககாங்கெயாவெனது கண்ணனே.
46
தானடக்கு நெறிமட்டுமுத்தியிடை சாரவுய்க்குமெனு நினைவிலான்
மோன முக்தியஃதெவ்வகைத்ததனை முன்னிமேவிட நன்னெறிகளா
யானதெத்தனை நன்மறைகள் சொற்றளது மென்னவாய்ந்திலர் களையையோ
ஒனிவ்வண்ணமிவர் மதியழிந்ததருனெங்கு முள்ளகுகராஜனே.
47
பொங்கராவியிடை யோதிமங்குழுமு பொற்செயந்திபுர நாதமுன்
அங்கராக முலையேனலஞ்சிறுமிதோள் புணர்ந்து மகிழறுமுகா
இங்கராவினை நிகர்த்து மாயவினை யென்னையட்டுவரல் கண்டிடிற்
சங்கராஜன் முதன்மற்றுமுள்ள பலரெந்தவாறு சரணடைவதே.
48
மாவிருப்பினொடு செந்தில்வாழ்ந்து வருநமைவணங்க வருவாயென
நீவிளிக்குமொரு வார்த்தைதன்னை யெதிர்பார்த்துநிற்ப னெனிலென்குகா
யகவர்பாலுமென திச்சையில்லையிவனாக வேண்டுவது மில்லைமேற்
றேவர்முத்தியதின் வரவையுஞ் சிறிதுபார்க்கிலேனிஃது திண்ணமே.
49
அடலயிற் குமரனென்னை யாதரவுசெய்திடாதற வெனுக்கினும்
முடலிளைப்பனலனென் குலத்தியபிமான மெப்பொழுது முற்றுள்
வருகருண்டுபினும் வடுகியுண்டுமெனைமைந்தமைந்தயிவன் வாவெனக்
கழதழைத்த முதருத்தியும் பலவுமுதவிநின்றிடுவர் காணவே.
50
முற்றநான்மறையு மறிகிலாத மகமோனமாநினது பேரருள்
பெற்றனென்றிடவு மல்லனென்றிடவுமறிகிலாத வொரு பேதைநான்
குற்றமே பெருகவந்துளேன் புலவுகூட்டியுண்ணும் புலையென்னினுங்
கற்றவர்க்குதவு செந்தினாத வெனையாளுவாய் கழல்கள்சூட்டியே.
51
அண்டர்கொண்ட துயர்கண்டுவேக முடனம்புராசியிடை அசுரர்கள்
கண்டமாக வடிவேனொடுங் கரமிராறுடைக்கடவுள் புகழையே
பண்டுதொட்டெனது நாவுபாடிவருகின்ற தல்லதொரு பகவன்மற்
நுண்டெனச் சிறிதெனுள்ள மெண்ணிடினுமோதிடா தெனதுநாவுமே.
குகானந்தலகரி முற்றிற்று