|
திருச்செந்தூர் பதிகம்
|
|
|
1
|
நாதநான்
மறைகடேரா நம்பனேயும் பரார்க்கு
|
|
மாதியே
செந்தின் மேயவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
பாதநாண்மலர்கள்
சூடிப்பாடி மாதவ ரோடாடா
|
|
|
தேதமேபுரிய
வல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
2
|
புத்தமுதனைய
சொல்லாள் புனக்கொடி தழுவநீடு
|
|
மத்தனே
செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
மித்திர
விழியார்மாலில் வீழ்ந்து மெய்யடியான் போலு
|
|
|
மெத்தனாய்
வாழுகின்றேனென் னினைந்திருக்கின்றேனே.
|
|
|
3
|
துண்டவெண்
மதியுங்கொன்றையுஞ் சூடியுமேனையோரு
|
|
மண்டரும்
பரவுஞ்செந்தினாறு மாமுகத்தெங்கோவே
|
|
|
பண்டருமொழியினுர்
தம்படுமயற் காடுபுக்கி
|
|
|
யெண்டருவினைகள்
செய்வேனென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
4
|
மும்மலந்தணிந்தோர்க்கான
முத்தனே யெளிவந்தாளூ
|
|
மம்மையே
செந்தின் மேயவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
கொம்மை
வெம்முலையாரூட்டுங் கொடுமயலுருவனாகி
|
|
|
யெம்மையுமிழக்க
வல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
5
|
வட்டமா
வாயசூரை வடியயிலேவிக்கூளூ
|
|
யட்டவோய்
செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
சுட்டவூனருத்தி
வெந்தோற்றுருத்தியை வளர்த்தற்கான
|
|
|
விட்டமே
பூணவல்லேனென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
6
|
தப்பதை
யறியாவன்பர் தமையுருப்படுத்தவல்ல
|
|
வப்பனே
செந்தின்மேயவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
துப்பமை
யிதழார் மாலைத்தூண்டியே வளர்த்துலாவும்
|
|
|
இப்புலத்தோடு
போவேனென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
7
|
கொல்லியந்தேனைப்புல்லுங்
குன்றமே குருந்தேகோல
|
|
அல்லியம்
போதனேற்று மானுமாமுகத் தெங்கோவே
|
|
|
பல்லிய
முழங்கவாவும் படைமதன் வாளிபொய
|
|
|
எல்லியும்
பகலுஞ்சாவே னென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
8
|
பார்முதல்
விண்ணீராய பகுதியே வினையைநீற்றும்
|
|
ஆரழலுருவே
செந்திலாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
காரடுகுழலினார்
தங்கடுவிழி நெடியாவாளா
|
|
|
லீரிடவாழுகின்றே
னென்னினைந் திருக்கின்றேனே.
|
|
|
9
|
வள்ளமென்
முலைகளாட வரைமகள் மகவே வாவென்
|
|
றள்ளிமோந்தேத்த
வாருமாறு மாமுகத்தெங் கோவே
|
|
|
புள்ளுலாங்
கூந்தல் மின்னார் புணர்ப்பை யேகருதிவீட்டை
|
|
|
யெள்ளியீடழிய
வல்லே னென்னினைந்திருக்கின்றேனே.
|
|
|
10
|
மணிமலர்ப்பதங்கள்
சூட்டுமாதவர் எட்டற்காண
|
|
அணியதே
செந்தின்மேலவாறு மாமுகத் தெங்கோவே
|
|
|
பிணிமலமறுத்துணர்ந்த
பெற்றியன் நடையன் போலும்
|
|
|
இணையிலா
வஞ்சம் பூண்பே னென்னினைந்திருக்கின்றேனே.
|
|
|
திருச்செந்தூர் பதிகம் முற்றிற்று
|
திருச்செந்தூர் பதிகம்
Subscribe to:
Comments (Atom)