|
ஆனந்தக் களிப்பு
|
|||||
|
சங்கர சங்கரசம்பு சிவசங்கர சங்கர
சங்கரசம்பு
|
|||||
|
சங்கரசங்கரசம்பு
|
|||||
|
1
|
தொண்ணூற் றறுவர்கள் கூட்டம்
|
பிடி
|
|||
|
சோறுகுறைந்திடில் வந்திடும்
வாட்டம்
|
|||||
|
உண்ணக்கிடைத் தாற்கொண்டாட்டம்
|
எமன்
|
||||
|
ஓலைவந்திட்டா லெடுப்பார்களோட்டம்
|
(சங்கர)
|
||||
|
2
|
பின்னமாஞ் சோற்றுத்துருத்தி
|
நாய்கள்
|
|||
|
பிய்த்துப்பிடுங்கிடுங்
கொத்தைப்பருத்தி
|
|||||
|
பன்னாளுமோயாப்ரவர்த்தி
|
உற்றுப்
|
||||
|
பார்த்தாற்றெரி யுமனதைநிறுத்தி
|
(சங்கர)
|
||||
|
3
|
மாயப்பசுவாழுங் கொட்டில்
|
புல
|
|||
|
வம்பர்களை வர்முடக்கிடுங்கட்டில்
|
|||||
|
பேய்மனமாடிடுந் தொட்டில்
|
நிலை
|
||||
|
பேசப்படாதேயரை நொடிமட்டில்
|
(சங்கர)
|
||||
|
4
|
உற்றாருமுள்ளா ருஞ்சாவார்
|
நம
|
|||
|
தொண்டொடியார்களு மக்களுஞ்சாவார்
|
|||||
|
பெற்றோரு மற்றோருஞ்சாவார்
|
நாமும்
|
||||
|
பின்னேயிருந்தேங்
கியேங்கியேசாவோம்
|
(சங்கர)
|
||||
|
5
|
உடக்கான வோட்டையுருவம்
|
இத்தை
|
|||
|
உற்றுப்பார் நெஞ்சேயுனக்கென்னகர்வம்
|
|||||
|
கடக்கவிதுவே பருவம்
|
நமன்
|
||||
|
கண்டித்தாற்
செத்துப்பிறந்துவருவம்
|
(சங்கர)
|
||||
|
6
|
ஆடிடும்பாவையை யொப்பு
|
புல
|
|||
|
ஐந்துகுரங்குகள்
வாழ்ந்திடுங்கொப்பு
|
|||||
|
ஓடுங் காமப்பண்டம்வைப்பு
|
அதை
|
||||
|
உண்டென்று நம்புவதே பெருந்தப்பு
|
(சங்கர)
|
||||
|
7
|
தங்கத்தை மாற்றாகச்சேர்த்துத்
|
தரை
|
|||
|
தன்னிலழுத்திக் குடியிருந்தாலும்
|
|||||
|
துங்கப்ரமனோலை வந்தால்
|
உங்கள்
|
||||
|
தங்கப்பனாலே தடுக்கக்கூடாதே
|
(சங்கர)
|
||||
|
8
|
ஜீவனுஞ்சித்துமே யொன்று
|
அந்தச்
|
|||
|
சித்தைநிறைத்திடப் பார்ப்பதேநன்று
|
|||||
|
சாவதும் வாழ்வதும் நின்று
|
இதைச்
|
||||
|
சற்குருவாலே பெறுவதுமென்று
|
(சங்கர)
|
||||
|
9
|
காமப்பசாசேறும் பீடம்
|
பாவ
|
|||
|
கன்மவினைப்பேய்கள்
வாழ்ந்திடுமாடம்
|
|||||
|
தீமைகள் செய்வதேபாடம்
|
மல
|
||||
|
தேகத்தைப் போலேயுண்டோமுழுமூடம்
|
(சங்கர)
|
||||
|
10
|
வஞ்சகரோடு கூடாதே
|
பொல்லா
|
|||
|
மாரிசமாகிய வேஷமெடாதே
|
|||||
|
கஞ்சத்தனத்தை யடாதே
|
பாழுங்
|
||||
|
கட்டையை மெய்யென்று நம்பப்படாதே
|
(சங்கர)
|
||||
|
11
|
இரண்டுகால் நாட்டியவீடு
|
மேலே
|
|||
|
இரண்டுகொடுங்கை வைத்தான்மலக்கூடு
|
|||||
|
உண்டென்று நம்பினாற்கேடு
|
உன
|
||||
|
துள்ளுள்ளேயாடிடுஞ் சித்தனைத்தேடு
|
(சங்கர)
|
||||
|
ஆனந்தக் களிப்பு
முற்றிற்று
|
|||||
ஆனந்தக்களிப்பு
Subscribe to:
Comments (Atom)