குமரபோதம்


குமரபோதம்
1.
வள்ளிக்குருகி மலர்ப்பதஞ்சூடுமணக்குமரா
கொள்ளிக்கொடுஞ்சிறு தேள் கொட்டியாடுங்குரங்க தென்னத்
துள்ளித் துடிக்குமனத்தேற்குமா மறைசூட்டுபதம்
உள்ளிக்கசியக்கிடைக்குங் கொலோ விவ்வுலகத்திடையே.
2.
வீரக்கலாபமிசை வருவோன் வெய்ய சூர்தடிந்த
தீரப்ரதாபன் மலரடியே யிந்ததீய வல்லற்
பாரப்பவக்கடனீந்தும் புணையெனப் பற்றல் செய்யார்
ஆராப்பரோ வரியேனுலகீர் சொல்லுமாய்ந்துணர்ந்தே.
3.
கணியுங் கழையுங் கருவேலும் வேலுஞ் செங்காள்தனாமாத்
துணியுங் குணிலின் றெளியுந்துதைபுனத்தோகைபதம்
பணியுங் கீழவநினைப் பாடல் செய்யப் பயந்தசுகம்
பிணியும் பெருந்துன்பமென்றாலிங் காருனைப் பேசுவதே.
4.
இந்தார் சடிலத்ரிசூலக்குமாரிக்கு மேந்துகர
மந்தாகினிக்கு மதலாய் நினை சொற்றவாயதனாற்
சிந்தா குலத்தரை நிச்சீந்தரே யென்றுந்தீயவரை
யைந்தருவே யென்று மோதி நின்றேன் நல்லவாக்குமிதே.
5.
சுதையிற்சிறந்த கவிபாடி யாடித்துதிக்கச் சொற்ற
வதை முற்றும் பற்றிட வில்லேனெனினும் யிலரசே
புதையப்புதைக்கவும் பின்னிடங்கொள்ளி பொருத்தியெனைச்
சிதையிற்கிடத்தவுஞ் செய்யாது நின்பதஞ் சேர்த்தருளே.
6.
திரங்கலும் வாசத்துடியுஞ் செந்தேனுந் தினையுநின்பால்
வரங் கொள்வன சரத்தாருந்திகழ்புனமானுளத்தாய்
உரங்குகொளவுண்டலுமுண்டபின்னொண் டொடியார்க்குருகி
இரங்குலுமாயிருந்தாலென்று வாழ்வனிவ் வேழையேனே.
7.
கண்ணென்று பின்னரக்கண்ணுக்குக் கண்ணெனக்காட்டியிதே
நண்ணுங்கதியு நமக்காரமு மென்றிந் நாய்க்கருளி
யெண்ணுமனஞ் செத்தவே காந்தத் தென்று மிருக்கவைத்த
புண்ணிய நீயலதேவர் பெற்றோர் செங்திற்புங்கவனே.
8.
செந்திலும் வாரியலைப் பெருக்கேளு திறலுமந்தச்
சந்தன வெற்புஞ் செழுவாலுகுழுநின் சந்நிதியு
முந்தவழைக்கு முகமாறும் வேலு முண்ணூலணியும்
மிந்த விப்பாவி கண்ணுள்ளேயிருக்கின்ற வென்னவிதே.
9.
எப்போது நீயிங்குவாவென்றழைத்தற் கிசைந்தனையான்
அப்போது முன்னிடல் சித்தங்கண்டாய் நின்னடியறியத்
தப்போது வல்லனல்லேன் குமரா நின்றன்றாளிணைக்கே
இப்போதழைத்துக் கொளலாமெனிற் செய்கவிட்டமுண்டே.
10.
என்போதம் போக விருமாந்திருக்குமிருப்பை விட்டேன்
மன்போத மானந்தம்விட்டேன் மவுனவரம்பை விட்டேன்
முன்போலுயாந்தவர் கூட்டங் கண்டாடலை முற்றும் விட்டேன்
நின்பாதத்தன்பொன்றுமே போது மென்னலுள் பிற நிச்சயித்தே.
11.
இன்றைக்குண வெங்கு நாளைக்குணவெங்கு யார் கொடுப்போர்
அன்றைக்கவர் கொடுத்தாரே யென்றெண்ணி யலைந்துலைந்து
பொன்றைக்கிடந்தவுடல் வளர்த்தே னென்புதுமையிதே
குன்றைப் பொருதகுழகா திருச்செந்திற்கோகிலனே.
12.
எல்லாங் கடந்தது மெல்லாமிருப்பது மெம்மிடமென்
னுல்லாச வளத்தை யருள்குமரா நின்னையன்றி யொன்றைப்
புல்லாமற் பொய்யினை மெய்யென்று வாழும்புன்னாய் கருரிடஞ்
செல்லாமற் புன்கவி சொல்லாமனிச்சிந்தை செய்தருளே.
13.
தூணிக்கண்ணீர் விட்ட முதாலும்படித் தொண்டனென்னப்
பாணிப்பிலேனும் பகர்ந்தாயிலை யென்னபாவஞ் சொலாய்
ஆணிக்கனகப் பொருப் பேபினாகிக் கருந்தவமே
மாணிக்கமாமலையே மயிலேறு மழவிடையே.
14.
கேதம் பெருக்குமில்வில்லற வாழ்க்கையைக் கிட்டிக்கிட்டிப்
போதம் பறிகொடுத்தேனையனேயல்லல் போதுமினி
நாதங் கலகலெனுநூபுரத்து நளிர்வனசப்
பாதம் புகலிடமாகச் செய்வாய் செந்திற்பண்ணவனே.
15.
துட்டக்கிராதகக் கூற்றன் வெம்ப செஞ்சுழற்றியென்னைக்
கட்டிப்பிடித்துக்கொண்டேகவுமிங்குள்ளகாரிகையார்
கிட்டிபுலம்பியழவுஞ் சிதையிற்கிடத்தியுள்ளாரிட்டப்படி
செய்யவுங் காண்பையோ செந்திலீச்சுரனே.
16.
ஆயுங்கலைசொற்றவானானுக்கப்புறத்தங்ஙன்மது
பாயும் பரம சுகங்கண்டு கண்டதைப் பற்றிப்பற்றித்
தேயும் பெருமைபெற்றென்றிரண்டாமெனச் செய்யாறியாப்
பேயும் பிறத்தற் இசைந்தேன் குகாநினைப் பேசவென்றே.
17.
சேய்போல முன்னிற்கும் வேலரசே செழுநான் மறையுந்
தோயாப்பரானந்தவாரிதியாடிச்சுகித்திடவுந்
தாய்போலு நின்னிருதண்டையந்தாள் பற்றிச் சார்ந்திடவு
நாய் போற்றவஞ் செய்ததியாவருளாரிந்த நானிலத்தே.
18.
செய்யு மகரக்குழையுஞ் சடானனச் செப்பமுந்தேன்
பெய்யுங் கடப்பமணி மார்புமாறிரு பேதமதாய்க்
கையிற்றிகழும் படைகளும் வேலுமென் கண்முனின்றால்
மையிற்றிகழ்பகடேறும் பசாசெங்ஙண் வந்திடுமே.
19.
இகுளைக்கிதஞ்சொலியேனற் சிறுமிதற்கின்புசொலி
முகுளப்பயோதரஞ்சேர்ந்திட்டவாவென்னைமுன்பினில்லா
வகிலத்தார் சொல்லும் பழிப்பையுங் கேட்டுக் கொண்டன் பற்றபுன்
நகிலக்கசட்டு மின்னார்பாலென்னெஞ்ச நணுகுவதே.
20.
பானக்கிரணத்தொருகோடிபாஸ்கரபந்தியென
மானப்பெரிய மகுடமுஞ்சண்முகமண்டலமும்
வானப்பிடியுமடமானுங்கூடிடுமந்தரமு
நானெத்தினத்தினிற்காண வல்லேனென்றனன் னெஞ்சமே.
21.
சுத்தமதாகுநின்வைபவநாமஞ் சொலிநடிக்கும்
பித்தங் கொளவுமனமுண்டு செந்திலைப் பேணிவந்து
நித்தந்தொழவு மனமுண்டு மோன நிறைந்த நின்வாய்
முத்தங்கொளவுமன முண்டுமால் செந்தில் முன்னவனே.
22.
பாரதிகேள்வன் பதுமிக்கிறைவன் பவானி மன்னன்
வாரதிருக்குந் தனிச்சிமோகன் மற்றுள்ளபலர்
சீரதெல்லா முற்றும பார்த்தேன் மிகுதுன் பந்தேர்ந்து கொண்டேன்
சாரச பாதத்தினன் பொன்னுமே சுகஞ்சண்முகனே.
23.
எல்லாந்தருவன் குமரனென்றேதியு மென்றன்வழி
நில்லாய்பதைக்கின்ற பேதை நெஞ்சே நின்னோடு நித்த
மில்லாத வாதங்கள் செய்வதற்காவியிருக்கின்றதா
கல்லாகினுஞ் சற்றுருகிடுமே யென்ன கர்மமிதே.
24.
பாடலஞ் செண்பகம் பஞ்சரஞ்சேர்புனப் பைங்கிளியை
நாடல் கொண்டேகி மணந்தோ யெனக்குயிர் நாயகமே
தேடல் கொண்டல்விடத்தே யென்னையாண்ட திருவருளே
டூடலுங்கூடலுமாயிருந்தாலெங்ஙனுய்குவதே.
25.
ஜாலம்பயப்பயச் செல்கின்றதுய்ந்திடக்காட்டுமறு
கூலமும் பையவெனை வெறுக்கின்றது கேர்க்குமரா
சீலந்தவஞ்சற்றுமில்லேனென்னாவனெனுஞ்செறுக்கோ
சாலம்பலவுஞ் செய்கின்றேனெங் கேவருஞ் சற்கதியே.
26.
குணித்தாற்குணிக்கப் படாப்பாவஞ்செய்வதைக் கொண்டுவெறுத்
தணித்தாய் நமனைவிட்டென்னாவியோட்டியலம் வந்திடப்
பிணித்தாலு நின்றன்கை வேலாயிரண்டு பிளவுபடத்
துணித்தாலு நின்னடிப்பற்று விடேன் செந்திற்சுந்தரனே.
27.
எனக்கு நினைக்கும் பொருத்த மதிலை யெனினுமிந்த
மனக்குக்கலை நின்வசஞ்சேர்த்துக் கொள்ளாதிமான்மதத்தாற்
கனக்குந்தனச் சிறவேடிச்சியோடுஞ் கலந்தவந்தப்
புனக் குன்றிலேறி பலவேட்டஞ்செய்யப் பொருந்துமிதே.
28.
மாலப்பயோதரப் பாகீரதிசுதன் பாதமதே
காலங்கடந்தொரு கண்டந்தான் மசுகங்கடந்து
மூலங்கடந்து ளமுற்றங்கடந்து முதுமறையி
னோலங்கடந்து நிற்கும் பரமாமென் வோர்ந்திலரே.
29.
கல்லாச் சிறியனை நாயினைப் பேயினைக் கண்ணிலியைப்
பல்லாரிகழவிடக்கணும் பொக்கனைப் பத்தர்குழுப்
புல்லாப்புலையனை யோர்போதமு மற்றபோக்கிலியை
யெல்லோருக்கு மேல் வைத்தையால் செந்திலா யென்ணெ திருள்ளதே.
30.
இப்போதென்னோடு மவுனம் வைத்தாயிதிலேதுமிலை
எப்போதுமின்னிலை நின்றிடிற்குற்றமுண்டியாதென்னிலோ
மைப்போதெனும் விழியெந்தாய் குறத்திமன்னா வென்றிடு
மப்போதிலென்னென வேண்டுமையேயித்தையாய்வந்து கொளே.
31.
வருத்தமில்லாது கவிகள் வந்தானின் மலர்ப்பதத்திற்
கருத்தாயழுந்திட மாட்டாதென்னஞ்சங்கவிக்கரசே
மருத்துக்கிணைய சொற்சேர்ந்து ளதாய் மறுநாள் வரையிற்
றிருத்தவொரு கவிவந்தான் மிகுபயன் செய்தருளே.
32.
ஈரமில்லாநெஞ்சை வைத்துக் கொண்டின்னருளீந்திடென்று
லார்ரதானளிக்குந்திருவுளத்தாரயிலேந்திவந்தோய்
சீர்கொடு பாடிக்கொண்டாடி நெக்காடிச் செந்தீமெழுகை
நேர்படைந்து கண்ணீர்விடச் சற்று நினைந்தருளே.
33.
அல்லினுக்கண்ணனுமந்திக்குத் தோழனுயந்தரத்து
வில்லுக்கு பெற்றத்தகப்பனு நாய்க்கொரு மித்திரனுஞ்
சல்லிய மாதர்தம் வஞ்சகச் சொற்கொரு தாய்ப்பிள்ளையுங்
கல்லுக்கு நட்பனு மென்மனமே செந்திற்காங்கெயனே.
34.
ஐவர் முடக்குஞ்சிறுகுடி நொந்திங்கழிவதன்முன்
மெய்வைத்தமோனத்தைமேவனோ வெற்பினூடுருவ்
வை வைத்த வேல்விடுசூரா கிராதகர் வாழ்த்திநிற்கு
நெய் வைத்த கூந்தற் சிறுமியை வேட்டவ நின்மலனே.
35.
அலையிலையின் மடக்கிற்று றையிலடுத்திடு காத்
தலையிற்குலையிற் பவளஞ் செறிசெந்திற்சண்முகத்தாய்
நிலையுந்திடமென்னசொன்னாலும் பொக்க நிரம்புமுடல்
குலையங்குலையுமென்றெண்ணியென்னாவிகுலைகின்றதே.
36.
இல்லாவுலகை மனைவிமகாரையிதமிதென்னச்
சொல்லிக் கொண்டாடு மணமாய் பேய் வந்து சுற்றிக்கொண்டால்
வெல்லம் புண்ணுக்குக்குப் போகாது தப்பொடுவில்லடித்தால்
மெல்லத்தலை சுற்றியாடும் வரந்தரும் வேலப்பனே.
37.
துறப்போமென்றாலிவ்வெனத்தைத் துறப்பது சூர்தடிந்தோய்
மறப்போமென்றாலிவ்வெனத்தை மறப்பது மாயை கெட
விறப்போமென்றாலி வணியாரேயிறப்பவரில்வண்ணமே
பிறப்போமென்றாலிவணியாரே பிறப்பவர்பேசிடிலே.
38.
உதிரச்சிரித்தவர் கோர் ஞானதேசிக உச்சிக்குமேல்
மதியமுதே முத்தியென்போரும் பொன்னைமகிழ்ந்து கொண்டு
கதிதருவோமென்றுபதேசம்வைக்குங்கபட்டுநெஞ்சப்
பதிதருஞானக்குருக்களென்னாலென்னபண்ணுவதே.
39.
மின்னாரழலையுமக்களப்பாவெனவிம்மலையுஞ்
சின்னாருதேடிச்சிலர் பாடை கட்டத்திரிவதையு
முன்னாகக்காண்பதற்கே யிங்கு வாழ்ந்தனமூடனெஞ்சே
யென்னாவிருக்கின்றதே குவம்வா செந்திலைக்குறித்தே.
40.
ஆய்ந்து நற்சொல்லையடுக்கிக் கவிகளறைந்தறைந்து
வாய்ந்த நின்பேரருள் பெற்றிடநாளு மறைந்திட்டதாற்
தேய்ந்திடு நுண்ணிடை வள்ளிபங்காதினந்தேனுந்தெனுயிர்
ஓய்ந்திட்டநாளினிலெவ்வாறு பாடவுதவிடுமே.
41.
ஒருவரிடஞ்சென்று கற்கவுஞான முணர்ந்திடவு
மருவருப்பானவென்னுள்ள மதனை யறிந்து கொண்டு
குருவுருவாக வந்தாண்டனையே யென்கொடுப்பனென்றோ
இருவருந்தேடவறியார் பயந்த விலஞ்சியமே.
42.
தந்திட்ட மெல்லிடையார்க்கும் பொருளுக்குந்தாரணிக்கு
நொந்திட்ட நாளிங்க நேகமுண்டாமென்ற நோய்கண்டுநீ
வந்திட்ட நாளொன்றைக்காணே னென்மட்டென்ன வஞ்சநெஞ்ச
பந்திட்டமாமுலைவள்ளி பங்காள பகருதியே.
43.
பேணித்தவஞ்சே யல்கண்டிடவந்து பிதற்றியப்பால்
வேணிப்பிறையொடுவெள்விடைமீது விளங்கிடலும்
நாணிக்குணிந்த மலைமாது மங்கள நாயகிதன்
காணிக்குவாய்த்தகுழந்தாயெந்நாளுனைக் காண்பதுவே.
44.
குன்றின் சிறகரிந்தோனயன் நீல்வணக் கோவலவன்
என்றுந்தொழுதே மலரடி போற்றிடவேற்குங் கந்தா
நின்றன்புகழ்சொற்றுமொன்றுங்கிட்டாது நித்தம்நடந்து
பொன்றும் புலையரைப் போயிரந்தே னென்னபுன்மையிதே.
45.
எங்குமுள்ளா யெனினென்னுள்ளுமாகுவை யின்னுயிராய்
தங்குவை யென்னினென்றனுயிராகவுந்தங்குவையான்
இங்கென்றுனை வருவாயென்று நத்தியிறப்ப னென்னும்
பங்கக்கவிசொல்லல் பேதமையாஞ் செந்திற் பண்ணவனே.
46.
ஐயாறு மாறுங் கடந்தப்புறத்துக்குமப்புறத்தாய்
மெய்யாய்விளங்கு முனைப் போற்றல் செய்யும் விருப்பை விட்டுப்
பொய்யாம் பிரபஞ்சந்தணில் விருப்பாயுயிர் போக்கி யென்று
நைவாரிப் பேயரையா ரென்னலாஞ் செந்தினாயகனே.
47.
குடியிற்சிறந்த குறமாதிடந்தன் குறையுரைத்துத்
துடிவிற்கையாளனென நின்ற சுந்தரத்தோழநின்றன்
வடிவிற்றிலகநுதலினிலுந்தியின் மார்பிற் பண்டி
மடியிற்சிறிய வடியிலென்போத மறைந்ததுவே.
48.
என்மனஞ்சென்றுன தீராறு தோள்களிலேறிற்றென்றன்
சொன்மலிசோனையர்  பாவிலுங் கற்பகத் தொங்கலிலு
மென்மலர் நீமத்தொடையிலுமின்னது மேம்பட்டதே
வன்னதேயா மெனிலேன் வெறுத்தாய் செந்திலாண்டவனே.
49.
முன்னாகநிற்பது, நீயென்னைக் காக்க முயன்றெனது
பின்னாக நிற்பது செவ்வேலமுதைப்பிசைந்திருத்தப்
பன்னாளும் பக்கத்திருதாய்ரெனனிலென் பாக்கியத்தான்
என்னவெவர்க் குழந்தையே செந்தூரிலிருப்பவனே.
50.
கையான் மலர்கொடு பூசித்து பாசித்துக் கைதொழுது
மெய்தான்விதிர்த்திடநாச் சொற்குளறி வெதும்பியெ
னையா செயந்திக்கிறைவா  யென்றேத்தியழுதுருகலை
செய்யாவுனமெனக்கென்று கிடந்தது சிருஷ்டியிலே.
51.
கண்டித்தடுத்த சமயக் குரோதக்கசடர் தம்மைத்
துண்டித்தெதற்கு மொருபரமே யெனுஞ் சொல்லில
முண்டித்து நீசொற்றமோனவுல்லாச மொழிவரம்
யெண்டிக்கிலும் பரவச் செய்வனோ செந்திலீசகரம்.
52.
மாயைக்கிடமறச் செய்ததும் பொய்யின் மயங்கிநின்ற
சேயைப் பரானந்த வாழ்வே நீயென்று திடமுறைத்
தோயைச் செய்வித்தது மொன்றிரண்டென்று சொல்லாத
தாயத்தைச் சொற்றது மோர்மொழியே செந்திற்சண்முகனே.
53.
பால விலோசனப் பாகீரதி முடிப்பாவை பங்கன்
வேல விசாகவிமலா வெனச் சொல்லி மெய்யணைத்துக்
கோலத்திருமுக முத்தமிட்டேந்து குலவிளக்கே
வாலப்பருவத்திருவே யெங்குற்றனை வந்திடையே.
54.
கங்கைதலையிற் புராரிதன் றோழிற் கண்ணீ வெராற்
சங்கப் பவானி முகத்திற்குறத்தி தனத்தின் மறை
யங்கத்தலையிற் றிகழுந்திருப்பத மாய்ந்துணராய்
பங்கத்தவனென்றனுள்ளத்து முண்டென்றன் பண்ணவனே.
55.
ஓலையுந்தூதரும் வந்திடக் கண்டுயிரோடு முன்னம்
பாலையும் பஞ்சையும் தேடுங்களென்று பலருரைக்கக்
காலையும் நீட்டி விழியேறிய கடைவாயில் மொய்க்கத்
தாலையும் நீட்டிக் கிடப்பன் கொலோ செந்திற்சண்முகனே.
56.
கட்டிவிழியினிற் சந்தப்பிப்பின்னடைக் காயிலையைத்
தட்டி வெள்வாயில் வைத்தண்ணேயிப்பாடையைத் தாங்குவேன்
கொட்டிக் கொடுசென்று சுட்டிடுவாரது கூடுமுன்னங்
குட்டிக் குறைத்தலைப்பேயீர் செந்தூரனைக் கூறுமினே.
57.
பாட்டன் செத்தானவன் பரட்டன் செத்தான் பின்பு பாட்டிசெத்தாள்
பூட்டன் செத்தனவனம்மை செத்தாமென்று போய்புலம்பி
வாம்டமுற்றே யிருகானீட்டியம்மைகள் வாய் விட்டழக்
கேட்டதல்லானெஞ்சமே யெது கேட்டுக்கிடந்தனமே.
58.
பத்தியற்றாய் குகன் செந்தாளைப் பேணிடப்பாவிசைக்கும்
யுத்தியற்றாயுயர்ந் தோர்குழுக்கூடிடும் யூகமற்றும்
சத்தியற்றே யெனன்றுஞ் சொல்வாயவ்வண்ணஞ்சரி கண்டிலேன்
முத்திவிலைக்குக் கொளலா மென்றோ வெண்ணமூட நெஞ்சே.
59.
பந்தென்பை வாலப் பயோதரமென்பை பதுமைமுக
மிந்தென்பை யல்குலைத்தேன்றட்டிதே யென்பை யேழை நெஞ்சே
யுந்தியொருபுறஞ்சீக்கட்டிநாறியொழுகிவிழும்
பொந்தென்பையோ ஷண்முகரிடத்தேயென்புகலுவையே.
60.
ஊருண்டுசோறிட வோண்டு கொண்டிடவுன் பெரிய
பேருண்டு சொல்லவது கொண்டு முத்தியும் பெற்றிடுவேன்
பார்கொண்டபாச் சொற்றிங்கே தேனுங்கேட்பனென்றெண்ணமிடேல்
கார்கொண்டபூண் முலைவள்ளி பங்கா முன்பு வந்தருளே.
67.
ஆலங்கொண்டாலுங் கொளலாஞ் சினந்தடுத்தீப்புகலாங்
காலச் சரீரத்தை வாளாயரிந்து குவித்திடலாஞ்
சீலந்தந்தோங்கு நின் சீரடிக் யேன்புசெய்பவர் போற்
சாலங்கொண்டார்தமைச் சேரவொண்ணா தென்றன் சண்முகனே.
62.
அபிராமியந்தரி சுந்தரி கொளரியமலிநித்தந்
தபியாததாண்டபியாயிபவானி ஜடானனத்தி
கபிக்கநுகூலிநற்போதப் பரமசுகாதிபற்கே
லபிக்குஞ் சிவபுத்ரனென்று முன்விட்டது லெளகிகமே.
63
பட்டுக்கும் பாவையர்கட்டுக்கு மின்னிடு பைந்தொடிகைக்
குட்டுக்கும் பாவிகள் பாதச் சுமைக்குங் கொடியவல்குற்
றட்டுக்குமாளெனச் செய்தையல்லானின்றன்றண்டையந்தான்
மட்டுக்கு மாளெனச் செய்தாயிலை மயில் வாகனனே.
64.
தந்தங்கருக்கு முன்னீ வந்து மொய்க்குமுன்றக் கண்ணிற்
சந்தனமப்பு முன் கால் கையிற் கட்டிட்டுச் சாரவைத்துக்
குந்தியிருந்து குறைத்தலைப் பேய்கள் குளறிடுமுன்
எந்தையைச் செந்தனை யேற்றுமின்காளுமக்கின்பமுண்டே.
65.
கன்னலுந்தேனுங்கனியுமழுதுங் கருப்புவட்டும்
பன்னலஞ் செய்யுமறு சுவையும் பானவர்க்க  
மென்னெதிர் வந்தவையாவுங் கசந்திட்டதென்குமரா
உன்னருணூபுரப் பாமிர்தந்தனை யுண்டு கண்டே.
66.
பச்சைக்கலாபமும் பன்னிருதோளும் பதாம்புயமும்
செச்சை யணியுந்திருமுகமாறுஞ் செவ்வேற்கரமுங்
கச்சையரையுமுடை வாளுங்கண்டு களித்தவனும்
பிச்சை யெடுப்பனென்றால் நல்லதானதிப்பேய்பிறப்பே.
67.
தீவினைத்தாருபவை மோதுங் குடாரத்திருக்கரத்தைப்
பாவனையா லென்றும் பற்றியதேதுக் குப்பாழுடலை
யோவலிலாவினையே தேனுஞ் செய்பொழுதோடி வந்து
காவ கொண்டாள் வதற்கே யென்ன வோர்ந்தீலை.
68.
அல்லார் குழற்கிஞ்சுகவாய்க் குறத்தியினாவல்கொண்டு
மல்லார் புயத்தொடும் வில்லொடு மேக வழிகொண்டநாள்
பல்லாயிரமடி தாங்கிய பைம்புனத்தே பருக்கைக்
கல்லாகியேனுங் கிடந்திலனே செந்திற்காங்கெயனே.
69.
நன்னுந்தெரிகிலன்றீதுந்தெரிகிலன்னான நெறி
யொன்று மறிகிலனென்னுடையாயிவ்வுடல் கழிந்தா
லென்றும்பிறந்து வருவன்கொலோ நின்னிணையடிக்கீழ்
பொன்னாதிருப்பன் கொலோ வறியேன் செந்திற்புண்ணியனே.
70.
ஐயார்ந்து நாச்செத்திருவிழி செத்திங்கயலிருந்த
மையாருங்கண்ணியரையோ வென்றோதி மயங்கியழுத
தெய்யாமுன்னின்னிருதாளுஞ் செவ்வேலு மெழில் முகமும்
பொய்யாது தோன்றிடு மோவறியேன் செந்திற் புண்ணியம்.
71.
மாயாரகிதமனோன் மணிபால மந்தாகினிக்குஞ்
சேயாயிருந்த பெருஞ் செல்வமே நினைச் சிந்தை செய்யு
மோயாப்பிணிக்கு மின்னா ரெனப் பேர்கொண்ட வோண்டொடிக்கை
பேயார்தமக்கு முருகிநின்றேனென்னபெற்றியிதே.
72.
வட்டத்தனக்குறவள்ளி பங்காவென் வாய்க்கவியை
யிட்டம் பெறவிங்கு கேட்பது போலெனியேன்றனது
கட்டநட்டத்தையுங் கேட்டல் செய்யாய் நின்றன்னைப் பொறுப்பாக்
நட்டம் வருமென்றிங் கெண்னங் கொலோ செந்தினாயகனே.
73.
எல்லாநினது செயலெனிலென் செயயேது மில்லை
வல்லாய் நடுவிற்கிடந்தயர்ந்தேனிந்த மாமயலைச்
சொல்லா திருக்கவு மாட்டேன் சொன்னாலுளத்துன்பமென்னப்
பல்காலு மஞ்சிப் பயப்படுவேன் செந்திற் பண்ணவனே.
74.
குங்குமவண்ணத் திருகுமரா கொடியேனுயிருக்
கிங்கு வெங்கூற்றந் தொடர்ந்திடுங்காலமெதிரினின்று
நங்குடித்தொண்டன் தொடாதிருதொட்டிடினம்மயிலாற்
பங்கப்படுத்துவமென்றோதியேக்ருமை பாலிப்பையே.
75.
தொல்வினைபோக நின்மாயாரகிதசுகானுபவத்
தல்லும்பகலுமிருந்திடநித்தமிங்காய்ந்துணருங்
கல்வியதே கல்விமற்றையகல்விகள் கன்மவல்லற்
புல்லியதீநெறிக்கேயுய்ப்பவாம்செந்திற்புண்ணியனே.
76.
சோதிடம்பக்ஷிசரநூல் வயித்தியஞ் சூக்கு கர்மம்
ஆதவனன்னிலை மாரண மந்த்ரமறைந்ததெல்லாம்
பாதக நம்முடல் சாமென்று நிச்சயம் பற்றுதற்காம்
பாதனை யென்றுணர்ந்தேங்குமரேசனைப் போற்றுமினே.
77.
உடலுக்குட்சூலை படுவன் கவுசிகை குட்டங்குன்மம்
உடலைப்பவுந்திர மீழையிளைப்பின்னபற்றிநம்ம
துடலைக்குருக்கியுயிருண்ணச் சாவம்பின்னுற்றவர்கள்
சுடலைக்கொடுப்பதுச்சத்தியஞ்செந்திலைச்சொல்லுமினே.
78.
என் மனைமக்களு நின்னவர் காயமிருந்த பொறி
நன்மதிசீவனு நின்னவைநாடொறுநாவில் வருஞ்
சொன்மலிபாக்களுநின்னவை நானறினந்தோய்ந்துவருஞ்
சின்மயவாழ்வு நினதே செந்தூரிற் சிவக்கொழுந்தே.
79.
உண்ணலும் பூசியுடுத்தலுஞ் சாரியுறங்கலுபின்
னெண்ணலு மெண்ணியிசைபாடி யாடலுமிக்குடும்பி
நண்ணலுமக்கடனைப் பெற்றெடுத்தலும் நாரிக்கின்பம்
பண்ணலு நின்றனக்காயே செந்தூரிற்பரானந்தனே.
80.
ஜெகமற்றுச் சிந்தையற் றெல்லாமு மற்றுத் திகம்பரியாய்
மிகநோக்கிநானென்னிரு கண்ணிடத்திலுமுத்து திர்த்துன்
அகநோக்கம் பெற்றுக்குறு நகையோ டொன்றைச் சுட்டலற்ற
மிகநோக்கி லென்றிலிருப்பேன் செந்திலாய் நித்தியானந்தனே.
81.
காட்டத்தை யொப்பக்கிடந்தன்று நீயங்கு காட்டித்தந்த
நாட்டமதாய் நிற்குநாளையிந்நாளினவிலுதியால்
வாட்டமில்லாத்தன வேடிச்சிகேள் வமனோ மயமுங்
கூட்டுவிஞ் ஞான முமானந்தமுஞ் சொன்ன கோகிலமே.
82.
பொல்லாய் மடநெஞ்சமே யுன்றன் சிந்தனைபோக்கிக் கொண்டா
லெல்லா நலனும் பெறலாமதற்கிடையூ றென்றில்லை
யுல்லாச நம்மிடத் தெல்லாமு முண்டதை யூன்றிச் செல்ல
வல்லாளன் செந்திற்கு குருநாதனுண்டு மயங்கலையே.
83.
மோன பரானந்தவாரிதியாடி முடிந்தபின்னர்
தானந்தனக் கென்றதீத மதாகிடச் சம்மதித்து
நான்மறையுங்குமரேசனுஞ் சொன்னதல்லா னெஞ்சமே
ஆனந்தத்தொன்று மதீதமின்றாலிதை யாய்ந்து கொள்ளே.
84.
வெங்காமப் பண்டப்பெருங்கப்பலே விகற்பத்தருவே
சங்கற்பசாகரமேயவிவேக சரபுஞ்சமே
மங்குமஞ்ஞானமகமேருவே கொடுமாயைமைந்தா
வெங்கோடுகின்றனை நீயிங்குவா செந்திற்கேகிடவே.
85.
ஆலென்பை நீண்ட வயிலென்பை தேவவமிர்த மெய்யை
சேலென்பை பாவிகள் கண்களை யன்னவர் தீயசொல்லைப்
பாலென்பை கண்டென்யை மெய்ஞ்ஞான மூறிப்படர்ந்த வெற்றி
வேலென்ன மட்டு நின்னாச் செத்ததோ வெல்வினை நெஞ்சமே.
86.
நானென்று போவனென்றெண்ணா திருசுகம் நங்குமரன்
வானெனவந்துட்புறம் பெனல் போகவளைந்து கொள்வான்
கூன்காந்தப்பாண்டத்திடு மூசியாய்ப்பின் கொதுகெனவாய்த்
தான்போன போக்குந்தெறியாது போவை தனிநெஞ்சமே.
87.
ககராஜராஜன் மறைராஜன் போற்று கனைகழலான்
நகராஜன் பெற்ற மகதராசி போற்றிடுநங்குமரன்
மகராஜராஜனவனை யல்லாலிந்த மானிலத்தே
சுகராஜனாய் நம்மை வாழச் செய்தார் ரெவர் சொல் நெஞ்சமே.
88.
காலமகாலமிரண்டுங் கடந்த கடவுணின்றன்
கோலமுணர்ந்திலன் சின்னூலைக்கற்றுச் சில குறியிட்
டேலு நாதியனே யென்பனாதியென்றென்றுஞ் சொல்வேன்
மூலமறைக்குமப்பாலேயிங் கென்னை முனியலையே.
89.
கடலேறிமன்னர் சபையேறிநீள் கழையேறிப்பனை
மடலேறியுச்சிமலை யேறித்தேடிவருந்துகின்றா
ரடலேறிய வடிவேலாவிதென்ன வகிலத்தவ   
ருடலேறிய வுயிரோர்பிடி சோறுண்ப தோர்ந்திலரே.
90.
கைக்கட்டுங் காற்கட்டுங் கட்டிக்கிடத்திக் கடக்கு மட்டிற்
பொய்க்கொட்டு கொட்டிக் சுடலைக்குக் கொண்டுபுகா முன்வரார்
செய்கொட்டிச் சூற்சங்கமேறுந்திருச் செந்திற்சேவகனை
மெய்கட்டழகனைவேலனைப்பாடுமின்மேற்கதிக்கே.
91.
காலாயுதக் கொடி வேலா விதென்ன கதியறிய
வேலாதவென்னையிம்மா யைப்பிசா சோடிணைத்து விட்டாய்
பாலாய்வருமென் கனத்தடித்தாற் சிறுபாலகனா
னாலாயிரந்தரஞ் சொன்னுலுங்கேட்கிலை நல்லதன்றே.
92.
வேண்டாம் விருப்பும் வெறுப்பும் யுமென்று லிங்த வேதைமனம்
தூண்டா நின்றோர் பொருளைப் பற்றியாடி துடிக்கின்றது
மாண்டாலு மத்தை விடுவனோ வென்று வழக்கிடுதே
ஆண்டாய்நீ முற்று மறியாததல்லவயிலரசே.
93.
மநுமுதல்யாரு மடிந்ததைக்கேட்டும் புன்மாயையிந்தத்
தநுவொன்றுஞ் சாதலிலை யென்றுநெஞ்சஞ் சலிக்கின்றது
மினுகெனு மிவ்வுடல் சாஞ் சாருமென்றெண்ணிடுமேன் மதிக்கே
யநுதாபமுற்றும் வரச் செய்குவாய் செந்திலாண்டவனே.
94.
காலத்திரிசூலந்தனக்குமஞ்சேன் சற்கதியழிக்குங்
கோலப்பயோதரத்தார்க்குமஞ்சேன் கொடுஞ்சூரைவென்ற     
வேலப்பநின்றன்றிருநாமந்தன்னை விளம்பல் செய்யா
மூலப்பகுதயிருட்டருக் கஞ்சுவன் முற்றிலுமே.
95.
ஆகின்னா நாளுமிருக்கின்றது செல்வராயிருந்து
சாகின்ற நாளுமிருக்கின்றது சத்துப்போயுடலம்
வேகின்ற நாளுமிருக்கின்றது நம்மை விட்டிங்கொன்றும்
போகின்றதில்லை கண்டீர் செந்தூரனைப் போற்றுமினே.
96.
ஊழென்பதில்லை நம்மாசை கெட்டாலிழிவோதி நிற்குந்
தாழ் வென்பதில்லையகம் போயினாலென்றனிநெஞ்சமே
வாழ்வென்பதில்லையொரு படித்தா நிலைவந்ததென்றற்
பாழென்பதில்லை பரிபூரண மெங்கும்படர்ந்திடிலே.
97.
ஞானமும் பெய்யனு சந்தானமும் பொய்யங்கு நாங்குளித்த
மோனமும் பொய்யகண்டாகார விர்த்திமுன்னிட்டு நின்ற
வானமும் பொய்மற்று மெல்லாமும் பொய் மதிப்பேதுமற்ற
வானந்த மொன்றும் மெய்யாம் நெஞ்சமே யிரையாந்து கொள்ளே.
98.
நிராமய நிர்த்தொந்த நிர்த்தோஷநித்ய நிவாரண
அராகம மலது விரோதமாயைக் கதீதமதாம்
பராபரம் நித்தியஞ் சூன்யத்தையுண்டிடு பாதமதும்
தராதலம் போற்றுங்குமரேசன்சொன்னதனிப்பொருளே.
99.
கங்காதரன் கண்ணன் வேதன்றனபதி கண்ணதிகன்
தங்கும் வடுகருருத்திவர்பூதச் சதாகதியோர்
அங்குளதேவர் முனிவருரகரகிலத்துள்ளோர்
எங்குளருந்தங்கலெம்மிடத்தென்றனனென்குருவே.
100.
வேதம்பூவாணமிதிகாசஞ் சாஸ்த்வம் வியன் பலநூல்
யாதுமொருங்குத் தொடர்ந்தோடித் தேடியுமெட்டவொண்ணா
பாதன்மரமணிதேகுறிநீகிட்டிப்பார்குமரா
போதம் பெருகுமென்றான் நெஞ்சமே செந்திற் புண்ணியனே.
குமரபோதம் முற்றிற்று