திருப்பரங்குன்றப் பதிகம்

திருப்பரங்குன்றப் பதிகம்
இரட்டையாசிரிய விருத்தம்
1.
பொன்மயிலுலவிவரு சூர்வென்ற வீரனீ பூரணானக்த வருளாற்
   பொருளாவியுடன் மூன்று நின்றனக்கீந்திட்ட பொருவிலாவொருதீரன் நான்
இன்னல் தருமாணவ விருட்போர்வை கீறியென் இளைப்பெலா மாறக்கரத்
   தேந்தியருளமுதீந்த வன்னைநீ பிள்ளைநானிப்படி யெலாமிருந்தும்
கன்ம மலவாதனைகள் சற்றுமஞ்சாமலொருகைபார்ப்பமென்று மெள்ளக்
   கண்பார்த்தொளித்தெனது வளனெலாமினிதிற் கவர்ந்து கொண்டர்புரம்போய்
நன்னகைபுரிந்திடவும் வந்ததே தெய்வமே நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
2.
உலகவர்களோடிங்கு பழகுவதனாவென்று மொளியாது வளர்துன்பமும்
   உன்னருட்பூரணமதாயெங்கு மாகாத வொப்பிலாவொரு துன்பமும்
கலகமதனம்படர வருதுன்பமுங்கொடிய கன்மவாதனையரவு போற்
   கட்படம் விரித்தெனைச் சீறவருதுன்பமுங் காணாததற்குமேலா
இலகுமுலகன்னை மனைமக்கள் மெய்யென்றுளத் தேங்கமாமாயை செய்யும்
   இடையறாத் துன்பமுங் கூடியெளியேன்றனை யெறும்புண்ட நாங்குழுப்போல்
நலிய வாட்டிடுகின்றவே யென்னசெய்குவேன் நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
3.
நீபமலர்மார்பமு நாடியவர்கலிகீறு நெடுவேலும் புயம்போல்
   நிகழ்சடானனவழகுமுதயகிரியிற் கதிரை நிகருகுண்டல நிரைகளும்
பாபவிருள் சிதறவருள் முதிரப்பழுத்தொழுகு பன்னிருவிழிக்கருணையும்
   பவளாசலப்புயமீராறு மியானெனும் பற்றறுத்தன் புருவமாய்த்
தாபமுறு மடியனிருதயமும் விட்டகலாத தண்டையும் பொற்சரணமும்
   தாவி வருமயிலுமொரு வெண் கோதியுங்கனவு தன்னினுமியான் மறக்கேன்
நாபன்மறை நாபனொடு சுரர்தேடு தெய்வமே நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
4.
ஊன்றினால் நில்லாத திம்மாயை யெங்கணுமுண்டில்லையென்ன நிறைவா
   முன்னதருளிவை யிரண்டினிவந்த மாயையை யுபசரித்துலகிலுள்ளோர்
ஏன்றமட்டிலுமிந்த வாழ்வு பெற்றமைதி யோடேமாப்பில் வாழ்கின்றார்
   ஏழையோ நின்னருளை யோயாது பாசித்து மிற்றவரையொன்று மறியேன்
ஆன்றமறையருணாடிலருளாவரென்றவுரையடியனேன் மட்டுமிலையோ
   அல்லதிம்மாயைவலியருள் வலியை வென்ற தோவதுவுமின்றென்னிலறியா
நான்றவ முயன்றநெறி நெறியல்லவோ புகல்வை நற்பரங்கிரியுலாவு
      நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
  
5.
பட்டதெல்லாம்போது மாயையே போவென்று பலதரஞ்சொல்லினாலும்
   பரிகாசமாயெண்ணிமீளவுஞ் சூழ்கின்ற பாரிலுள்ளோர்கள் தம்மோ
டிட்டமாயில்லறவழப்பமதை யோதினாலிவனினைவு வேற தென்ன
   ஏதுமொழியாதகன்றப் புறம்போயென்னையிகழும் வழி தேடுகின்றார்
அட்டமாசித்திபெறு நின்னன்பர் பாலேகியடி பணியினிவன் வஞ்சகன்
   ஆகுமென்னோதிடாருள்ளபடியிவையெலாமதுதினங்கண்டு நொந்து
நட்டநடுவினின் நடைப்பிணமாகி வாழ்வதோ நற்பரங் கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
6.
கலகலெனவொரு கோடிகவிகள் சொன்னாலுமென் காலலோடு பேதை மனதைக்
   கட்டியொரு கிரியோகமுற்றாலுமென்வறிய காய் கனிகளுண்டாலு மென்
உலகாசை விட்டினியவருளாசை யுற்று நின்றுருகியனன் மெழுகதாகி
   உள்ளுடைந்தது கண்டு பேரருட்பிரகாச முள்ளவிருளைப்பருகிடத்
தலமுள்ளபடி கண்டு மெள்ளவங்கேநின்னு தற்போதமதையருத்தித்
   தானுமெதிரும் போகவங்குபோயினதென்ற தன்மையுமறிந்திடாத
நலமொன்னுமே முத்தியாமென்றுரைத்தவா நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
7.
கெண்டையங்கண்ணியர்கள் மயல்கொஞ்ச மனதனிற்கிட்டிவிடின் மென்னமென்ன
   கெட்டுவிடுமப்பானன்னிலையடையலாமென்று கேட்டேனெனெண்ணமாறாது
விஷயபண்டையர்கள் சொன்ன காமாதிமுதலுள்ளபற்பல விஷயமொவ்வொன்றையும்
   பார்க்கிற்றுரும்புதூணாகவுந்தூணதோ பருமரமதாகவும் மேற்
கொண்டந்தமரமலையதாகவுமலை பெரிய கொடுமுடியின் மேரு வாயுங்
   குலவியினம் வளர்கின்ற தென் செய்வேன் தெய்வமே வென்னறிவானது
கண்டளந்திடுநாழியாச் சுதே யோகர்வளர் நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
8.
பன்னாளூமுன்னோடு வாதாடியுங் கவிகள்பாடியு முடலமெல்லாம்
   படபடெனவுளமுருக விருகணீ  ரோடிடப்பரவசமதாகி நின்றும்
என்னாளினீயெனக் கருள்புரிவையென்றுன்னை யிதமதாய்க் கேட்டுநொந்து
   மிற்றவரையெனதுளமுமாளவிலை நற்சுகமுமெய்தவிலையாதயாலே
யுன்பொருளிவ்வுடலென்ன நின்ற நிலை தன்னைவிட்டூனுடம் பென்பொருளென
   வுன்னியிதை விட்டுவிட்டப்பாற்கிடைக்கின்றவுடலியானாலு மருளின்
நன்மை பெறலாகுமென்றெண்ணுகின்றேனரிய நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
9.
அத்தணியுமிடையிலே வுடையிலே தொடையிலேவணிநடையிலே சடையிலே
   ஆடுநயமொழியிலே தளதளப்பாகுமுகமதியியே யமுதமுமிழ்வெண்
முத்தணியும் நகையிலே மூலையிலே தலையிலே முழுமோச நிலையிலே யென்
   மூடமன மோகித் தெதிர்த்தெதிர்த்தென்னோடு முடியாது போராடுதே
கத்தனீயறியாததல்ல நான் நாமினுங்கடையான பாவியெனினுங்
   கருணை வைத்தாளுவது மூனையலால் வேறு கதிகாட்டுவாரெவரையனே
நத்தனையன்றியாத முதல்வர்க்கு முதல்வனே நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும்வடிவேலனே.
10.
ஊனொழுக வொருபுறங்கிருமிகருணைத் தொழுகவுட்கி நாறும் விடக்கை
   யொப்பிலாவழு தென்ன நத்தியுண்டடி யற்றுலர்ந்த வொரு பழுமரம் போற்
றான்முடிவில் வீழுமிப்பாழுடல் வளர்த்திடுஞ் சவசமில்லாப்புலையனைத்
   தையலாரல் குலாங்குழியிலிழி நாற்ற நீர்தனை மோந்து திரிநாயினைத்
தேனொழுகு கவிகள் சொலு நின்னருளொதுக் கிடஞ்சேர்ந்து பேதங்கடந்து
   செத்துத்திரிந்திடாப் பாழ்ங்கொடியனைக் கொடியதீய போகத்தையுண்ண
நானென்றெழுந்துவருதீயேனையாள்வையோ நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
11.
புல்லறிவரோடென்று மேலாது மாயமாம் பொய்ப்போக மெய்யெனாது
   போக்குவரவற்ற பரிபூரணானந்த நிலைபோந்து மெய்த்தேவராய்
வல்லவரினஞ் சேர்ந்து வாழ்த்திய வரிருபாதமலர்சூடி நல்லூழியம்
   வாஞ்சை யொடு மவரடியிலோயாது மேலவர் வாக்கிலூறுமமுதை
மெல்லமெலவுண்டினப்பாறிப்ரமானந்த மேவியென்னாளுமரிய
   மெய்ஞ்ஞானமான பயிர் தழையவருள் மழை பொழியுமெய்யன்பருள்ளிலங்கு
நல்லறிவினுருவாகி வாழச் செய்யையனே நற்பரங்கிரியுலாவு
   நாதனே வேதமறை முடிவான பரவெளியினடமாடும் வடிவேலனே.
திருப்பரங்குன்றப் பதிகம் முற்றிற்று