|
மிருதுபாஷ்ய வரலாறு
|
|
அன்பர்களே!
சுவாமிகள் சமாதி கூடுங்காலத்தை முன்னாகவே
கல்லிடைக்குறிச்சியிலுள்ள தம் சீடர்களுக்கு அறிவிக்க,
அவ்வாறு அறிவித்த காலத்தன்று
பக்தர்களும், அறிஞர்களும் அவரை
தரிசிக்க வந்தார்கள்.
அப்பொழுது மிருதுபாஷ்யம் முப்பத்திரண்டு பாடல்களை
அக்கணமே சுவாமிகள்
திருவாய் மலர்ந்தருளி
அங்குள்ளார் யாவருக்கும் அனுக்கிரகஞ்செய்து,
உடன் சமாதி கூடிச்
சச்சிதானந்த சொரூப சாக்ஷாதகாரமாய் விளங்கியது
அப்பட்டணத்திலுள்ளார்
யாவருங் கண்கூடாய்க்கண்ட காட்சியாம். ஆதலின் முருகன் புகழ்
நிறைந்த
இம்மிருதுபாஷியத்தை நித்தியானுஷ்டானம் செய்து முடித்து
பக்தியோடு
ஒன்றுபட்ட மனதுடன்
ஏகாந்தத்திலிருந்து பூஜித்து பாராயணம் செய்துவரில்,
|
|
பலநோய் அகலும்
|
பவமே விலகும்
|
|
மதியோவளரும்
|
நிதியே திரளும்
|
|
புவியோர் புகழக்
|
கவியோ திகழும்
|
|
அலகை பலவும்
|
அணுகாது ஒழியும்
|
|
கூற்றுவன்றன்னைக்
|
குடிகெடுத்தோட்டி
|
|
குகனடியின்கீழ்
|
குடிபுகச் செயுமே.
|
|
பலன்கள் வேண்டிய
பரிசெலாம்பலித்திடும்
|
|||||
|
பரமதத்துவஞானி
|
|||||
|
நலங்கொணாமமாம்
மந்திரஞ்செபித்திட
|
|||||
|
நயந்தவனீராடுஞ்
|
|||||
|
சலங்கொடீர்த்தமா மவன்றிருமேனியே
|
|||||
|
சகலதெய்வமுஞ் செவ்வாய்
|
|||||
|
மலர்ந்தவாசகமறுபிறப்பெனவரு
|
|||||
|
மயற்பிணிமருந்தாகும்
|
|||||
|
என்று கூறும் சுருதிப் பிரமாணங்களே இதற்குப்
போதிய சான்றாகும்.
|
|||||
|
மிருதுபாஷ்யம்
|
|||
|
சிற்பரவெளியிடைமாறாதூறிடு
|
|||
|
தேனேமுருகோனே
|
|||
|
தேவப்பிடிவிளையாடிடுமலையே
|
|||
|
சிற்சுகமே சுகமே
|
|||
|
அற்புதமே யழகேயொளியே
|
|||
|
யெனதன்பே பேரின்பே
|
|||
|
அநவரதமு மறவாவடியார்
துணை
|
|||
|
யாளேபுத்தேளே
|
|||
|
கற்பனையற்றமோனிகளுலவிடு
|
|||
|
காவேயென்கோவே
|
|||
|
கந்தாவரைமகள்
மைந்தாவூறிடு
|
|||
|
கண்டேமலர்வண்டே
|
|||
|
தற்பரநிலையதையுணர்வோருளசத
|
|||
|
தளமே எனதுளமே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயா நிதியெனையாளே.
|
(1)
|
||
|
செந்திலமர்ந்
தெனையாளுடையாய்
|
|||
|
பரசிவமேமுதுதவமே
|
|||
|
சீதரனயனோடேனையர்
போற்றுந்
|
|||
|
திருவேயென்குருவே
|
|||
|
மந்தரமுலையார்மயலடுபெரியர்தம்
|
|||
|
மனமேயவரினமே
|
|||
|
மங்களநாதவுல்லாசவிலாச
|
|||
|
கேவலமே கோகிலமே
|
|||
|
சுந்தர
நூபுரபதயுகளாம்புஜ
|
|||
|
சூராஹோங்காரா
|
|||
|
தொம்பதமானது நம்பதமென்றருள்
|
|||
|
தூயாகுமராயா
|
|||
|
சந்ததமதுகரமுரல்
குழல்மறமகன்
|
|||
|
சரசாநாவரசா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(2)
|
||
|
கலகலெனும் பரிபுரபதயுகள
|
|||
|
விலாசாகதிரேசா
|
|||
|
கணகணெனுஞ்
சிறுகிண்கிணிதங்கிய
|
|||
|
கடியாய்மறைமுடியாய்
|
|||
|
மலவுணர்வுடைய
வரறியாதுறைவுறு
|
|||
|
மறைவேயிவணிறைவே
|
|||
|
மாகோலாகல கேகயமஞ்சுள
|
|||
|
வதனாவுருமதனா
|
|||
|
பலமறைதுருவிட
நிலைபெறுசின்மய
|
|||
|
பகவாகுகதேவா
|
|||
|
பாசாங்கு
சதரியாமளைகுண்டலி
|
|||
|
பாலாவநுகூலா
|
|||
|
சலதரமிருகதரருர
மதில்வளரவ
|
|||
|
தாராஸ்ரீங்காரா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(3)
|
||
|
ஹர ஹர பவஹரதிரிகுணரஹித
|
|||
|
வராகாவைபோகா
|
|||
|
ஆதாரா சிவபோகா
மிர்தமருள்
|
|||
|
அபயா சொலுமுபயா
|
|||
|
கரதலமதிலொரு
கனிபெறுபெரியர்
|
|||
|
கனிஷ்டாவென்னிஷ்டா
|
|||
|
காடலிங்கனமுமை
செயவருள்பவர்
|
|||
|
கண்ணேபர விண்ணே
|
|||
|
தரதலரசதலபாதல நிருபஷ்
|
|||
|
டாங்கா இருத்பிருங்கா
|
|||
|
தாமோதர ஹரிமருகா முருகா
|
|||
|
சாகாராதீரா
|
|||
|
சரசவிகசித குணாமிர்
தபோக
|
|||
|
சரீராஸ்ரீங்காரா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(4)
|
||
|
வசிநிசிசரர்
குலகலகாகுங்கும
|
|||
|
வர்ணா நிர்ப்பின்னா
|
|||
|
மாடம்பாபரடம்பா சுந்தர
|
|||
|
வபுஷாநரவேஷா
|
|||
|
சுசியொருதுவஜ
மதாயிடநிறுவிய
|
|||
|
சோமா குகநாமா
|
|||
|
தொம்பததத்பதவசிபதலக்ஷிய
|
|||
|
தொந்தாநிர்ப்பந்தா
|
|||
|
பிசிதரும
வருடனுறவகுமறிவரு
|
|||
|
பேதாம் ருதுபாதா
|
|||
|
பிராஞ்ஞோபாதிக
நிருபாதிக
|
|||
|
காம்பீர்யாமாவீர்யா
|
|||
|
சசிதரர்மருது முகுளாம்
புஜபதரருள்
|
|||
|
சகுணீசுப்ரமணீ
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(5)
|
||
|
தரவிதளிதகுவலயதரகுஞ்சரி
|
|||
|
சஹிதா மலரஹிதா
|
|||
|
தாரகமாகுக ஷண்மதநாயக
|
|||
|
சர்வாவதிகெர்வா
|
|||
|
வரகுணமலய மகாமுனி பரவு
|
|||
|
மகேசா ஜெகதீசா
|
|||
|
மந்தரகினி சுதவள்ளிமனோ
கர
|
|||
|
மாலாஸ்ருதிமூலா
|
|||
|
சுரர்தொழு
மகிபதிபரவிடுபாத
|
|||
|
சுபாங்காராஜாங்கா
|
|||
|
சுத்தாத்தொய்தரஜப்பிரிய
புதஜன
|
|||
|
சுலபாமாகலபா
|
|||
|
சரவசரவகில ரூபாகாரண
|
|||
|
தனுவே பலமனுவே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(6)
|
||
|
இகமேபரமெனுமடமையருளமதில்
|
|||
|
இருளே பேரருளே
|
|||
|
ஏகாம்பரபுர நாராயணிசுத
|
|||
|
வேகாவைசாகா
|
|||
|
மகர்மனையெமதெனு
மதிகெடுமவருள
|
|||
|
மதியேபெருகெதியே
|
|||
|
வாமவகோரவதோமுககுறமகள்
|
|||
|
வசனேபரவசனே
|
|||
|
குகநமகுமராயா சரவணபவ
|
|||
|
குரவாவறுசிரவா
|
|||
|
கோமளவாரா
மஞ்சரிசெந்திற்
|
|||
|
கோவே யென்பாவே
|
|||
|
தகதகவெனநட
மிடுசிவமருள்சிவ
|
|||
|
சாமி நிஷ்காமி
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(7)
|
||
|
நவாசரசிகமனோவதியார்தொழும்
|
|||
|
நாதாகுருபூதா
|
|||
|
நடனப்பிரிய சுகந்தப்பிரிய
|
|||
|
வநாதியோர் ஜோதி
|
|||
|
நுவலறுசமயமு
மடிதொழவருள்புரி
|
|||
|
நோக்கே யென்வாக்கே
|
|||
|
நோன்புறுமந்தணராய்ந்துளம்வைத்திடு
|
|||
|
நூனாவபிமானா
|
|||
|
கவலையென்நரலை கடந்தவர்
பரவு
|
|||
|
மகண்டா உத்தண்டா
|
|||
|
கானப்பிரியகலியுகவரதா
|
|||
|
பிரகாசா வவிநாசா
|
|||
|
தவசரணங்கெதியெனுமவர்முன்வரு
|
|||
|
சரணேவுயிரரணே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(8)
|
||
|
அக்கரவறுகிளமதிநதியணிவர
|
|||
|
வாவேகர்த்தாவே
|
|||
|
ஆடகவரைகிடு
கிடுவெனவாடிடு
|
|||
|
மத்தாவுன்மத்தா
|
|||
|
சக்கரவரையது
மடிகெடவயில்விடு
|
|||
|
சக்தா அவ்யக்தா
|
|||
|
சத்யோஜா தாதற்புருஷா
|
|||
|
யீசானாமகமோனா
|
|||
|
முக்குணசமுதாயப்
பிரகிருதியின்
|
|||
|
முடிவே யென்வடிவே
முகுளபாதம் புஜ்மென்முடிவைத்திடு
முருகே யென்னருகே
|
|||
|
தக்கவரோதிட நின்றிடு
நான்கே
|
|||
|
ஷட்டேநூற்றெட்டே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(9)
|
||
|
பஞ்சமதாகிய
கோசக்குகையுறு
|
|||
|
பாணுசிவசூனு
|
|||
|
பாடலகிசலயபாதாசித்தச
|
|||
|
பாங்காஸ்ரீரெங்கா
|
|||
|
செஞ்சரண்மறமகளழகினிலுருகிடு
|
|||
|
சீசாநிசுவாசா
|
|||
|
சித்கனசுந்தரபரமாத்தொய்த
|
|||
|
திருக்கேமாருக்கே
|
|||
|
அஞ்சனவிருளடு
பெரியவர்சென்றிடு
|
|||
|
மாறேயதனீறே
|
|||
|
அபிஷேகப்ரியகடினகுடார
|
|||
|
சுவஸ்தா கூடஸ்தா
|
|||
|
சஞ்சலரஹிதவஜாதாசித்ரச
|
|||
|
சேலா குகலோலா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(10)
|
||
|
ஜெயஜெயஜெயஜெயதிரிபுரஹரநிச்
|
|||
|
சேஷாவைசேஷா
|
|||
|
திருஸ்யா
திருஸ்யவதீதாசின்மய
|
|||
|
தேகாம்ருகிமோகா
|
|||
|
பயஹரணாநவபேதத்திரிகுண
|
|||
|
பசனாம்ருதுவசனா
|
|||
|
பரமாகாயசரீராலக்ஷ்ய
|
|||
|
பரோக்ஷாவபரோக்ஷா
|
|||
|
கயமுகனெடுவுடறுடிகொளவுயிர்கவர்
|
|||
|
காலாமுந்நூலா
|
|||
|
காகாசுரஹரிமருகா
குறமகள்
|
|||
|
காந்தாபரசாந்தா
|
|||
|
சயையோருருவமதாகிய ராஜத
|
|||
|
சாங்காவகளங்கா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(11)
|
||
|
வெங்கடகிரியுறையரசே
கார்த்திகை
|
|||
|
மீனேநெடுவானே
|
|||
|
வேதண்டத்தாய் கந்தகிரீச
|
|||
|
விகற்பாகந்தர்ப்பா
|
|||
|
கொங்கலர்சோலைக்கிரியாய்பழனிக்
|
|||
|
சூடியாய் சிறுபிடியாய்
|
|||
|
கோமள வேரகநாதாபலகுண
|
|||
|
குணியே வளர்கணியே
|
|||
|
துங்கவிநோதப்பிரியவேகார
|
|||
|
துரங்கிகோரங்கி
|
|||
|
சுசுரறுபரவவுன்மணிமுடிதனையுறு
|
|||
|
சுயமேயோவியமே
|
|||
|
சங்கட ஹரணாமகதத்வாசர
|
|||
|
லிங்காஸ்திரலிங்கா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(12)
|
||
|
அநாமயஷட்கோணத்துறுமூல
|
|||
|
வகாரா வாங்காரா
|
|||
|
அங்ஙனமொரு பொருள்
சொலியெனையாண்டிடு
|
|||
|
மாளா கண்ணாளா
|
|||
|
மனாதிகளனுதின
மெட்டியுமெட்டா
|
|||
|
வஞ்சகமே பிகமே
|
|||
|
மாறுகொடர்க்க
விநோதர்கனறியா
|
|||
|
வம்பே பூங்கொம்பே
|
|||
|
வினாவிடை எழுவாய்
பயனிலையான
|
|||
|
விகாரி சோகாரி
|
|||
|
வேதபுராண மென்னையே
யென்றிடும்
|
|||
|
விம்பா பிரதி பிம்பா
|
|||
|
தனாதிகரதி
விலைதரினும்வராத
|
|||
|
சரக்கே பகரக்கே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(13)
|
||
|
குணிலே குணிலின்றொனியே
குறமகள்
|
|||
|
குணமே குழன்மணமே
|
|||
|
குளிர்புனமே
யவணுறுபரணேயுட்
|
|||
|
குடியே யிடுபடியே
|
|||
|
கணியே தினையே
தினையின்குரலே
|
|||
|
கடமே சுனையிடமே
|
|||
|
கவிழக்
கூனிடுகிழமேபற்றிய
|
|||
|
கையேதுவள் மெய்யே
|
|||
|
அணியே பெறவருகரியே
சேர்த்திய
|
|||
|
வகன்மார்பே வெயர்வே
|
|||
|
அவண்மொழி பற்பலமுறையே
தோன்றிய
|
|||
|
வாறே யீராரே
|
|||
|
தணியாவிரகே கணமே மணமே
|
|||
|
சமரேபுரி தமரே
|
|||
|
ஷண்முகநாத புராதனபோத
|
|||
|
தயாநிதி யெனையாளே.
|
(14)
|
||
|
செம்மனமுடையவருடன்
விளையாடிடு
|
|||
|
செம்மலையே கலையே
|
|||
|
சிவமொன்றேயென
வறியார்சென்றிடு
|
|||
|
தீநெறியே வெறியே
|
|||
|
கும்மனமுடையகுதர்க்கிகள்
பட்டிடு
|
|||
|
குட்டே வருசொட்டே
|
|||
|
குமராவென்கிலர்
நெற்றிக்கிட்டிடு
|
|||
|
கோபி யென்வியாபி
|
|||
|
அம்மடமயில
புனமானிருதோள்புண
|
|||
|
ரழகாவொரு குழகா
|
|||
|
அம்மே உம்மே ரம்மே
வம்மே
|
|||
|
யனலே குளிர்புனலே
|
|||
|
சம்மத
மெதிலதையுடனுடனுதவு
|
|||
|
சகாயா வேகாயா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(15)
|
||
|
முக்கணர்
மகவாபகவாயாரினு
|
|||
|
மூப்பே யென்காப்பே
|
|||
|
மோனமகோததியாடினர்
மட்டினில்
|
|||
|
முன்னே யவருன்னே
|
|||
|
அக்கரவடிவே
யருள்வடிவேயதி
|
|||
|
னப்பாலே மேலே
|
|||
|
அத்திரி தொறுமாடிடுமென
தமுதே
|
|||
|
யறிவே மிகுசெறிவே
|
|||
|
நெக்கிடவுருகியறிந்தவர்
தந்திடு
|
|||
|
நேவேத்யா வேத்யா
|
|||
|
நினைவிட நினைவிடருசிதருகனியே
|
|||
|
நிரதா தவிர்விரதா
|
|||
|
சக்கிரி மருகாயோகி
களிருதய
|
|||
|
சாரங்கா துங்கா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(16)
|
||
|
அவ்வவருள
மதிலியானெனதென்றிடு
|
|||
|
மகமே யாடகமே
|
|||
|
யஷ்டா தசமேயுபமே யதனு
|
|||
|
ளடியே யதன்முடியே
|
|||
|
செவ்வரவணிபவர்சேயேயு யர்குல
|
|||
|
வெற்பே யெனதற்பே
|
|||
|
மேன்மே லென்பதின்மேலே
கீழே
|
|||
|
வித்தே மணிமுத்தே
|
|||
|
எவ்வெவரென்னிலை
கருதினரந்நிலை
|
|||
|
யீவோய் முன்னோவோய்
|
|||
|
ஏகாரத்தா வோகாரத்தி
|
|||
|
னியலே பெறுசெயலே
|
|||
|
சவ்வொடு ரவணபவாவென
வைகிய
|
|||
|
சாக்ஷி ஜெகசூக்ஷி
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(17)
|
||
|
குன்றக்குடியினி
லொருமொழி யுதவு
|
|||
|
குருந்தே யென்பந்தே
|
|||
|
கோவிலூரின்றென்
புறநின்ற
|
|||
|
கொடுங்காடே வீடே
|
|||
|
சென்றக்கொடிய கருஞ்சூரு
யிருணு
|
|||
|
சிங்கா ஷட்லிங்கா
|
|||
|
ஸ்ரீலிங்காபுல்லிங்கா
நபுஞ்சக
|
|||
|
லிங்கா சிவலிங்கா
|
|||
|
மன்றத்திடை நடமாடியு
வந்துள
|
|||
|
வரவே யுட்கரவே
|
|||
|
மலைமாதம்பிகை
மகவென்பதன்மிகு
|
|||
|
மனனே யென்னினனே
|
|||
|
தன்றற்பச் செயலற்றவர்
முன்னந்
|
|||
|
தானே வருவோனே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(18)
|
||
|
கனசாரங்க மழ்முலைவரை
மறமகள்
|
|||
|
கணவா விதழுணவா
|
|||
|
கமலாலயன விதிகெடவருள்
கடிபத
|
|||
|
கடனா துடிநடனா
|
|||
|
தனதாமெதையு
மிழந்தவர்பெற்றிடு
|
|||
|
சக்கே வாலக்கே
|
|||
|
சங்கர திரிமருகா
கெங்காதரி
|
|||
|
புத்ரா ஷட்வக்த்ரா
|
|||
|
நனவே கனவேயலதே சரவண
|
|||
|
நடுவே யகன்மடுவே
|
|||
|
நவில்பிரபவமுதல்வத்ஸரமே
|
|||
|
சுபநாளே நவகோளே
|
|||
|
சனகாதிபர்
தொழவருள்பவர்பெற வருள்
|
|||
|
சத்தே நிறைசித்தே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(19)
|
||
|
சன்மயமே
பலர்சொன்மயமேவார்
|
|||
|
தபசே சொலுமகசே
|
|||
|
சட்ஜமரி ஷபநிஷாதர தைவத
|
|||
|
சுரமே தற்பரமே
|
|||
|
வன்மனமுடைய
வரறியாச்சர்க்கரை
|
|||
|
வட்டே யென்சுட்டே
|
|||
|
மந்தரமலையே மலையாசலமே
|
|||
|
மற்றதுவே பொதுவே
|
|||
|
சொன்மன மற்றவர்பின்னாலோடிடு
|
|||
|
துணையே துயிலணையே
|
|||
|
சுப்ரம விப்ரப்ரியே
சொற்ற
|
|||
|
சுபேக்ஷா நிரபேக்ஷா
|
|||
|
தன்மணமெங்கு
நிரப்பிடுசந்தன
|
|||
|
சயிலா நெடுமயிலா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(20)
|
||
|
அங்கிங்கும் மெனலற்றிடு
சிற்பர
|
|||
|
வம்சா சூர்தொமசா
|
|||
|
ஹாலா ஹலபக்ஷணிசுத சம்பத
|
|||
|
வபீமா மாபீமா
|
|||
|
மங்குலியாமினி வைகறையே
|
|||
|
மத்யானா வபாரனா
|
|||
|
வாரிச முகமண்டல குருராஜ
|
|||
|
வைகாரி சிவயோகி
|
|||
|
கங்குலுமாற்றிடு
மதுவுமிலாத
|
|||
|
கவின்மனையே பினையே
|
|||
|
காசென்பதை
மிகுகாசென்பவர் பெறு
|
|||
|
கநகா கந்தநகா
|
|||
|
தங்குல
தெய்வமெனாவுயர்சுரர் தொழு
|
|||
|
சத்தே சதசத்தே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(21)
|
||
|
மேலவரிருதய
பஞ்சரம்வாழும்
|
|||
|
விதங்கா மாதங்கா
|
|||
|
விகடப்ரிய கேளிப்பிரியா
|
|||
|
பரவ்யோமா மாபூமா
|
|||
|
மூலமுநடுவணு
முடிவுமிலாத
|
|||
|
முதற்றருவே கருவே
|
|||
|
முக்தர்பலமே நீலோற்பலமே
|
|||
|
மூதுணர்வே புணர்வே
|
|||
|
காலமகாலமிரண்டை
மெத்திடு
|
|||
|
கபடி நிஷ்கபடி
|
|||
|
கண்டவருயிர்தனையுண்டுமகிழ்ந்த
|
|||
|
கடூரா நிஷ்டூரா
|
|||
|
தாலமதே கெதியெனுமவர்
பெறுசமு
|
|||
|
சயமே நிச்சயமே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(22)
|
||
|
இடைபிங்கலையே
சுழுமுனையே யதி
|
|||
|
லிலகொளியே வெளியே
|
|||
|
ஏறுபிராண ணுழைந்திடுதுளையே
|
|||
|
யிந்தே ரசபிந்தே
|
|||
|
கடையுகமதில் வருகாலே
கடலே
|
|||
|
கனலே யென்னுனலே
|
|||
|
காலாயுதவாரணமோர்
கொடியாய்க்
|
|||
|
கண்டோய் மறைவிண்டோய்
|
|||
|
தொடையாய்
தொடைசேர்கவியாய் நிறைதவ
|
|||
|
சுரபூஜ்யா ஆத்யா
|
|||
|
சோகஹராசுபதாயா சங்கர
|
|||
|
சுசியுடையாய் கொடையாய்
|
|||
|
தடையற்றிடு மானந்தாசக்தி
|
|||
|
தராயாஸ்தூலாயா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(23)
|
||
|
கேடதராசுபகேலா கோலா
|
|||
|
கிருதாநிறை விகிர்தா
|
|||
|
கேசரபாலகசான விதனையா
|
|||
|
கீதஞ்ஞா ராஞ்ஞா
|
|||
|
தேடியமறமகள்
பேரழகுக்கோர்
|
|||
|
சேகரமே தரமே
|
|||
|
சித்துருவே
சிவகாமிகுழந்தாய்
|
|||
|
திரனே மாதிரனே
|
|||
|
கூடலும் வாடலுமற்றவர்
வாழ்ந்திடு
|
|||
|
கூடே யவர்நாடே
|
|||
|
கும்பமுனிக்கு
மொருபொருளுதவிய
|
|||
|
குகனே தாரகனே
|
|||
|
தாடகியுயிர்கவர்க்கு
முகின்மருகா
|
|||
|
சபலாஜயபாலா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(24)
|
||
|
கஞ்சதளா க்ஷாஞா துருஞான
|
|||
|
காங்கேயா ஞேயா
|
|||
|
கத்யப்பத்யப்
பிரியாசுபமங்
|
|||
|
களனே பிங்களனே
|
|||
|
செஞ்சடை முடியுறு
கங்கையினீந்திடு
|
|||
|
சிறுபிள்ளாயுள்ளாய்
|
|||
|
தேவர்களென்பவர்தே
வேயருண்மய
|
|||
|
தேசா விஸ்வேசா
|
|||
|
வஞ்சமதா
யெனதுயிர்பொருள் வவ்விய
|
|||
|
மறவா சிறுகுறவா
|
|||
|
மாதிரிலோக
சுதந்தரகுருவே
|
|||
|
வலமே யவரிலமே
|
|||
|
சஞ்சரமாருதமாவே காயா
|
|||
|
சதுரா செந்தூரா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(25)
|
||
|
பாசதராயா பூர்ணானந்த
|
|||
|
பயோநிதியே பதியே
|
|||
|
பசுவேயிதனிடையுள்ளொளி
யேற்றவர்
|
|||
|
பாவனையே யனையே
|
|||
|
மாசறுமதியினர்
தபசேதபசின்
|
|||
|
பலமே மாம்பலமே
|
|||
|
வல்லவரிருதயவைப்பினில் வைத்திடும்
|
|||
|
மரகதமே ஹிதமே
|
|||
|
யீசர்முன்னூலையின்னானென
வேற்று
|
|||
|
மிலஞ்சியமே ஸ்வயமே
|
|||
|
யிந்துடனரவை
யெதிர்க்கவிடுத்திடு
|
|||
|
மெந்தாய் கதிதந்தாய்
|
|||
|
தாசனெனாமறமகள்
பணிசெய்திடு
|
|||
|
சக சாவிஸ்வாசா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(26)
|
||
|
அவரணிபணிமுனமயிலைநடாத்திடு
|
|||
|
மப்பா வலரொப்பா
|
|||
|
வவர்சீயந்தனைமுன்னவர்
முன்விட்
|
|||
|
டாடுவதே பெரிதே
|
|||
|
நிவர்நெடுமலை
தொறுநடமிடுசோபித
|
|||
|
நீபாவதிகோபா
|
|||
|
நிஷ்பிரபஞ்சா நீலமயூரா
|
|||
|
நித்யாமாசத்யா
|
|||
|
இவரவருவரெனலற்றோ ரெதிரு
|
|||
|
மிலாததுவேமதுவே
|
|||
|
ஏடணைமூன்றுமிலாத
மருந்தே
|
|||
|
யீறேயாறாறே
|
|||
|
தவர்பெறுமானவன்
கன்னத்திலகிடு
|
|||
|
தாடங்காசங்கா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(27)
|
||
|
வேதமறிந்துமிலோமே
யென்றிட
|
|||
|
விட்டோயமாவட்டோய்
|
|||
|
மிக்கவர்
நினைவிடவக்கணமேவு
|
|||
|
விராட்டேசீராட்டே
|
|||
|
போதமிறந்தவர்போத மதாம்
|
|||
|
போகேந்த்ரா யோகீந்த்ரா
|
|||
|
புண்யோதய புருஷோத்தமநாம
|
|||
|
புஜங்கேசாநேசா
|
|||
|
வாதமுமிரசமு முடிவுமதா
யுறை
|
|||
|
மாமூர்க்கா தீர்க்கா
|
|||
|
மருமலராவபின்னையை
வைத்திடு
|
|||
|
மாயா நலுபாயா
|
|||
|
தாதகியணிபவர்
பெறுபேரழகே
|
|||
|
தனபதியே நிதியே
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(28)
|
||
|
மழுவினில்முடியுள
புனலைவிடும்பர
|
|||
|
மார்த்தா நிகரார்த்தா
|
|||
|
மதகரியாரொரு
கையைச்சாணிடு
|
|||
|
மதலாய் பரநுதலாய்
|
|||
|
கழி தலை யதணுணல்லரவை
நுழைத்திடு
|
|||
|
கார்யாசா துர்யா
|
|||
|
கனல்விழியதின்
மதியமுதையொழுக்கிடு
|
|||
|
கந்தா சிறுமைந்தா
|
|||
|
உழுகூன்
கோடதைவில்லெனவாங்கிடு
|
|||
|
மூச்சாகாவூகா
|
|||
|
ஓடிடவாமையை
நீரின்விடுக்கு
|
|||
|
முதாரா வாதாரா
|
|||
|
தழுவியமறமகள்
கரமதில்வளரொரு
|
|||
|
சாருமகமேரு
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(29)
|
||
|
வாய்வருகாலினையரவுக்கூட்டு
|
|||
|
மகோதயமே மயமே
|
|||
|
மார்பிடுமங்க
முயிர்த்திடமனுமொழி
|
|||
|
வரனே தற்பரனே
|
|||
|
ஆய்நல்லறுகினைவிடை
முன்னிட்டிடு
|
|||
|
மகராமாவுகரா
|
|||
|
அணிசடையாய் நெடுவரவை
வளைத்திடு
|
|||
|
மதிபுத்தா சித்தா
|
|||
|
மாய்நீநேடிய
பதமிதுகாணெனு
|
|||
|
மதியுளதேயரிதே
|
|||
|
வாயிடைமணிநகை
காட்டெனவிரவிடு
|
|||
|
மணியே கருமணியே
|
|||
|
சாயகவிழிமான்
முகமதிநாடு
|
|||
|
சகோராவக்காரா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(30)
|
||
|
இமகிரிஜா தமகண நாதாநுஜ
|
|||
|
விஹதேமா மஹதே
|
|||
|
இரணியகெர்ப்பாசூத்ரான்மாவே
|
|||
|
யெதியே தீமதியே
|
|||
|
மமகுருராஜமகாராஜா மகதை
|
|||
|
ஸ்வரியாசூர்யா
|
|||
|
வாரிசமுகமண்டலவுத்துங்க
|
|||
|
மயூராகேயூரா
|
|||
|
அமரர்படைத்தலை வாமுடிவா
|
|||
|
மகளங்கா கட்வாங்கா
|
|||
|
அகிலாதாரா
வெதையுநடாத்து
|
|||
|
மதீனாஸ்வாதீனா
|
|||
|
சமனப்பிரிய
ரணங்கப்பிரிய
|
|||
|
சதாபால்யாமூல்யா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(31)
|
||
|
முக்யா முக்யா முக்யா
முக்ய
|
|||
|
முடியிடமே தடமே
|
|||
|
முக்தாபரணாமுக்தி
நிலத்துறு
|
|||
|
மூடே செங்கோடே
|
|||
|
இக்கெனுமொழிமட
மறமகள்பாடிடு
|
|||
|
மிசையே யவணசையே
|
|||
|
இகமுத்ரேஷ்ட
பலந்தருமொன்றே
|
|||
|
யெட்டே யெட்டெட்டே
|
|||
|
எக்கியவயிறொடு
சூழ்பூதர்க்குண
|
|||
|
விட்டோய் சூரட்டோய்
|
|||
|
இதிகாசஞ்ஸ்ருதி துதிசெய
வெங்கு
|
|||
|
மிருப்போய் வாழ்விப்போய்
|
|||
|
தக்கணமடியர்கள்
வேண்டியது தவிடு
|
|||
|
சாமீப்யா கோப்யா
|
|||
|
ஷண்முகநாதபுராதனபோத
|
|||
|
தயாநிதியெனையாளே.
|
(32)
|
||
|
மிருதுபாஷ்யம் முற்றிற்று
|
|||