எங்களைப் பற்றி

சுவாமிகளின்  வம்சா  வழியினர்   

ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் தவ புதல்வர் திரு. சு. ஆழ்வார்சுவாமி அவர்கள் , தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் நகரினில் மேலபாளையம் தெருவினில் தனது இல்லத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் சித்தவைத்தியத்தில் பாண்டித்தியம் பெற்றவர். நாற்பது அன்பர்களுக்கு மேல் சித்தவைத்தியம கற்றுக்கொடுத்தவர். அவர் கவிராயராகவும் விளங்கினார். அவர் இயற்றிய  ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் வரலாற்று கவியை இங்கு பதிவேற்றி இருக்கிறோம்.

ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் அருளிய பாடல் தொகுப்புகள் அச்சிடப்படாமல் இருந்தன.  அப்பாடல் தொகுப்புகள் அனைத்தும் கடுக்காய்  மையினால் எழுதப்பட்டவை.  அந்த கையெழுத்து பிரதிகள் சிதிலமடைந்து பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.

திரு. சு. ஆழ்வார்சுவாமி அவர்களின் ஏக புதல்வி திருமதி ஜானகி அம்மாள் – திரு நல்லையா அவர்களின் ஏக புதல்வன் திரு. ந. காளிதாசன் (தமிழ் நாடு மின்வாரியம்) அவர்களும் அவர்களின் புதல்வி திருமதி ரேவதி கணபதி அவர்களும் கையில் கிடைத்த அந்த கையெழுத்து பிரதிகளை ( சில பல பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை) புதிதாக ஒரு நோட்டு புத்தகத்தில், கையினால் எழுதி வைத்தார்கள். அந்த தொகுப்பினிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்.

ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளின் குருபூஜையினை (திரு ந. காளிதாசன், தமிழ் நாடு மின்வாரியம் - அவர்களின் புதல்வர்) திரு கா. ஜோதி சொரூபானந்தன் பல வருடங்களாக தலைமையேற்று நடத்தி வருகிறார். இப்பொழுது கையினில் இருக்கும் பாடல் தொகுப்புகளை  இந்த வலைப்பதிவினில் ஏற்றி உள்ளோம்.

இப்பொழுது, முதன் முதலாக வலைப்பதிவினில் எங்கள் பணியினை தொடங்கி உள்ளோம். இந்த வலைபதிவுக்கு (திரு ந. காளிதாசன், தமிழ் நாடு மின்வாரியம் - அவர்களின் புதல்வர்) திரு கா. நல்லையா, ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

இந்த வலை பதிவிற்கு தொழில்நுட்ப பணியினையும், மற்றும் வலைபதிவேற்றும் பணியினையும் பவித்ரா நல்லையா, (திரு ந. காளிதாசன், தமிழ் நாடு மின்வாரியம் - அவர்களின் பேத்தி, மற்றும் திரு கா. நல்லையாவின் புதல்வி) முழுமையாக செய்துள்ளார்.  ஸ்ரீ சற்குரு சுப்பராய சுவாமிகளுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.
   
இன்று 30/07/2015 – 144 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெறுகிறது.
   
இன்று 144 ஆம் ஆண்டு குருபூஜை நடைபெறும் இவ்வேளையில், இந்த புதிய வலை பதிவேற்றம் முறையாக இன்டர்நெட்டில் வெளியிடப்படுகிறது.

தொடர்புக்கு மின்னஞ்சல் : SRISUBBARAYASWAMIGAL@GMAIL.COM.

பல கோடி நன்றிகள்:
1.  திரு. சு. ஆழ்வார்சுவாமி அவர்களின் ஏக புதல்வி   திருமதி  ஜானகி               
     அம்மாள்  –  திரு நல்லையா அவர்களின் ஏக புதல்வன் 
      திரு. ந. காளிதாசன் (தமிழ் நாடு மின்வாரியம்).

2.   திரு. ந. காளிதாசன் அவர்களின் புதல்வி திருமதி ரேவதி கணபதி.

     இவ்விருவர்களும் எடுத்து வைத்த கையெழுத்து பிரதிதான் இன்று நமக்கு முக்கிய ஆவணமாக கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஆன்மிக பெருமக்களும், சுவாமிகளின் வம்சா வழியினரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.