குருபராபரணம்

குருபராபரணம்
1.
பத்தியிலேன் ஞானப்பழக்கமிலேன் கல்வியிலேன்
முத்திநெரிக் கெங்ஙன் முயலுகின்றேன் நான்பேதை
அத்திக்கிறை வாவரனார் தருமுருகா
சத்திவடிவே லெடுத்ததந்தாய் குருபரனே.
2.
அன்றேயுனக்களித்தே னாவியுடல்பொருளை
யின்னோர்குறையுமெனக் கிங்குளதாமோ
நன்றே விளைவைவினை விளைவை நானவற்றி
லொன்றேனும் வேண்டுகிலேனுண்மை குருபரனே.
3.
ஊனறுடற்சுமைக்கு மொண்டொடியார் தந்துவரு
மானாதமையதுக்குமானாக வைத்தாயே
நானாவிதற்கெல்லாம் நாயகமென் கண்மணியே
ஏனோவென் குற்றமியம் பாய் குருபரனே.
4.
சுகாதீத மேவாது தோற்பாவை போலலைந்தால்
நகாளோவுலகார் நின்னற் கருணைக் கேற்றதுவோ
மகார் மனைவி சுற்றமெனும் மாமோக வாரிதியுட்   
புகாமலொன்று சொல்லிவைத்தபொன்னே குருபரனே.
5.
வாக்கை மவுனமென்பார் மனத்தை மவுனமென்பார்
ஆக்கமற்ற வைம்பொதிகளத்தை மவுனமென்பார்
போக்கிலிகள் சோம்பிகளாய்ப் போல தேயல்லாது
தேக்குமோ மோனநிலை செப்பாய் குருபரனே.
6.
நின்னடியான் யானென்ன நீதெரிவிக்காதிருந்தால்
உன்னடியான் யானென் றுரைத்திடவும் நாணாதோ
தன்னடியானுக்கிச் சகலமுங்கைக் கொண்டவுனக்
கென்னவோக வாய் மவுன மெந்தாய் குருபரனே.
7.
ஆற்றுக்கோ ரோட்டமிலை யாற்று நீர்க்கோட்டமுண்டு
தோற்றுமதிக்கேது சுனை நீரசைவாகு
மேற்றிமவுன நிலையின்னதுவே சத்தியமாம்
வேற்றொருவர்க்கோதில்வெறுப்பாங்குருபரனே.
8.
பாடவந்த நாள் முதலாய்ப்பாக்கியமே நின்னையல்லா
லீடில்லாத் தேவர்களை யேனையரைப் போற்றினனோ
ஏடவிழ்தார்ச் சோன்மாடேகியோறைந்து கவி
சூடியவோர் குற்றமுண்டு சொன்னேன் குருபரனே.
9.
எட்டுமட்டும் வந்து மெட்டா திருந்தக்காள்
பட்டி மனந்தான் பதைத்துக் கொதியாதோ
வட்டவெழுத்தின்னவகை தெரியாவேதாவைக்
குட்டிச் சிறையிருத்துங் கோவே குருபரனே.
10.
மண்ணுக் கழுவேனோ மாழுலையாலே மருட்டும்
பெண்ணுக் கழுவேனோ பேதையெனதாண் குறியிற்
புண்ணுக் கழுவேனோ போதம் விளைக்குமுள்ளக்
கண்ணுக் கழுவேனோ கண்ணே குருபரனே.
11.
ஓடியுழைப்பதெல்லா மொண்டொடி  யாருண்மகிழ
வாடியிருப்பதெல்லா மாமுலையைக் காணவென்று
ஊடியிருப்பதெல்லா முன்றன்றிருவருளோ
டாடு மயிலேறு மென்றனப்பா குருபரனே.
12.
கிட்டியெனைக்கூட்டிக் கீழ்க் குழியிற்றள்ளாமிந்தப்
பட்டிமனத்தோடு பதை பதைக்கவிட்டதல்லாற்
கட்டிமுத்தத் தந்தையிலை கண்ணீர் துடைத்தையிலை
யிட்டமென்ன வெண்ணுயிலை யெந்தாலே குருபரனே.
13.
பாடிப் படிப்பதெல்லாம் பாவையர்தம் பேரழகைத்
தேடித் தவிப்பதெலாஞ்சீ யொழுகுங் கீழ்க்குழியைச்
சூடிக்கிடப்பதெல்லாந் தோதகியார் சீறடியை
நாடியெனை யாளவந்த நாதா குருபரனே.
14.
காணவழுவேனோ கட்டள காநின்றுருவைப்
பேண வழுவேனோ பேசாப்பரமசுகம்
பூணவழுவேனோ பொல்லாத வெண்போதங்
கோண வழுவேனோ கோவே குருபரனே.
15.
கன்றிக் கதறிக்கரைந்தே யிணை பிரிந்த
அன்றிலைப்போலானே னரசே நிணைக்கான
இன்றைக்கோ நாளைக்கோ விவ்வுடலிற்றீமூட்டு
மன்றைக்கோ நீவருவதையா குருபரனே.
16.
பாழுக்கழுவேனோ பாய்புலி போற் சீறிவரு
முழுக்கழுவேனோ வுள்ள தெல்லாந் தோற்றிருக்குந்
தாழ்வுக் கழுவேனோ தண்டையன் தாள் சூட்டுபெரு
வாழ்வுக் கழுவேனோ மன்னே குருபரனே.
17.
ஊனுருக்கும் பேரழகே யுள்ளூறும் பேரமுதே
கானிருக்கும் பூங்கடம்பே கண்ணிருக்கும் பேரொளியே
வானிருக்குங் கற்பகமே வாயிருக்கும் செந்நாவே
மானிருக்கும் பங்காளா மன்னா குருபரனே.
18.
மார்பிலனைத் தையிலை வாய்முத்தங் கொண்டையிலை
சார்பிலிருத்தித் தவிப் பெலாந் தீர்த்தையிலை
ஆரென்றானம் மடியனா மென்றுரைத்தையிலை
சீரரசே பேரின்பத்தேவே குருபரனே.
19.
தேனெனவா பாலெனவா தெவிட்டாக்கனியெனவா
வானெனவா காலெனவா மண்ணெனவா மற்றெனவா
நானெனவா நீயெனவா நானிறந்து போன விடந்
தானெனவா வென்னென நீசாற்றாய் குருபரனே.
20.
பெற்றவனை நொந்தாற் பெருவினையின் கோபம் வரும்
உற்றவனை நொந்தாலுயர் பிரமன்றன் கோபம்
மற்றவனை நொந்தக்கால் வானமுய்ய வெஞ்சூரைச்
செற்றவுன்றன் கோபம் வந்து சேருங் குருபரனே.
21.
கட்டாணி முத்தே கருப்பமுத்தே கண்ணின்முத்தே
எட்டாத முத்தே யெனக்குள்ளிருக்குமுத்தே
மட்டார் கழற்குறத்திமார்பில் வளருமுத்தே
யுட்டுளையாமுத்தே யொண்முத்தே குருபரனே.
22.
கண்டதுண்டோ நின்னு ருவங்கண்டொரு காலுன்னுடனே
யுண்டதுண்டோ பேரமுத முண்டவிடாயாற்றி முத்தங்
கொண்டதுண்டோ நின்றன் குறங்கினில்வைத்தோர் மாற்றம்
விண்டதுண்டோ வோங்கு பரவிண்ணே குருபரனே.
23.
சோலைக்குயிலே சுகம் விளைக்குங்குஞ்சுகமே
மாலைப்பொழுதே மறுநாளே முன்னாளே
காலைப்பொழுதே கடையுகமே பல்லுகமே
வேலைத்துறையே யென்வேந்தே குருபரனே.
24.
கண்ணாரப்பார்த்தநிலை கண்டு களித்தநிலை
யண்ரை வெள்றேதி யருச்சனைகள் செய்தநிலை
மண்ணாவேனின்னுமிந்த மண்ணாகவே துணிந்த
தெண்ணாயோ வென்னுயரை யெந்தாய் குருபரனே.
25.
கல்லாயிருந்த நிலைகட்டழகா நின்னூரிற்
புல்லாயிருந்த நிலை போந்தார் குடியிருக்கு
மில்லாயிருந்த நிலை யெந்தாவர்க்கமுதாம்
நெல்லாயிருந்த நிலை நித்தா குருபரனே.
26.
பாலானாலூன்றன் பணிமுடியிலாட்டிடுவார்
நூலானுன் மார்பினின் முநூலோடு சேர்ந்திருப்பேன்
காலானாலுன் கோவிற்காலோடுலாவிடுவேண்
ஏலாதானென் செய்வே னெந்தாய் குருபரனே.
27.
பாடவறியேன் படிப்பாரிடமறியேன்
றேடவறியேன் சிதம்பரத்தினின் வடிவைக்
கூடவறியேன் குராமணக்கு நின்பாதஞ்
சூடவறியேனென் சோதி குருபரனே.
28.
வேலா விசாகா விவாக விளங்குமை
பாலா, பரமா, பகவா வெனப்புலம்பி
நாலாவிதத்து நெஞ்சம் நைந்து நைந்து சுட்டபுண்ணை
போலாச்சுதையோ யென் பொன்னே குருபரனே.
29.
அறிவுக்கறிவே யப்பாலுக்கம்பாலே
குறியிற்குறியே குணத்திற்றனிக்குணம்
நெறியினெறியே நினைவிற் பெருநினைவே
செறிவிற்செறிவே சிவமே குருபரனே.
30.
போதமே போதம் புணராத பூரணமே
நாதமே நாதமுடியிருக்கு நற்பரமே
யேதமே யின்மே யிழுக்கே பெருவழக்கே
வாதமே யில்லதுவே மனனே குருபரனே.
31.
ஆகமெல்லா நின்றிடு நீரள்ளியணியுமெனின்
மோகமெல்லா நின்பதத்தின் மூழ்கிக் கிடக்குமெனின்
ஊகமெல்லா நின் வடிமுன்னதனையாயு மெனிற்
றேக மென்றும் வேண்டு மெந்தாய் செந்திற் குருபரனே.
32.
விட்டுப்பிரிந்தேனே வேற்றுடலமானேனே
கட்டிக்குலைந்தேனே கதிகெட்டா னானேனே
மட்டார் கழற்குறத்தி மாலா வடிவேலா
வெட்டுணையும் வாய்திறவாதென்னே குருபரனே.
     
33.
நோக்கமெல்லா நின்னுடைய நூபுரப்பபொற்பாதமதி
லாக்கமெல்லா நின்னுடைய வாறெழுத்தை யோதியது
லூக்க மெலா நின்றிருமுன் னோடிவிளையாடியதாற்
பாக்கியமே செந்திற்பரமே குருபரனே.
34.
துன்னிவிளங்குஞ்சுடர் மகுட மோராறும்
வன்னவனசமலர் முகமுங் குண்டலமும்
பன்னிரண்டு திண்டோளும் பட்டுடையுமுந்நூலும்
என்னெ திரிந்தோன்றிடுவ தென்றோ குருபரனே.
35.
நோயோ தெளியவில்லை நொந்தபுண்ணோ வாறவில்லை
வாயோ வடங்கவில்லை வாழ்நாளோ நீடவில்லை
காயோ பழமோ கனிகாயல்லாத துவோ
ஆயானா னென்று மறியேன் குருபரனே.
36.
அன்னையலுத்தாளயனும் படைத்தலுத்தா
னுன்னையான் நேடியுருகிய லுத்துவிட்டேன்
என்னையோ மேல் வருவதெத்துயரோ நானறியேன்
முன்னவா முன்னுக்கு முன்னே குருபரனே.
37.
பாட்டுக் கழுவேனோ பண்டிபெருக்க வைக்கும்
ஊட்டுக் கழுவேனோ உண்டாற் கிடக்க வொரு
வீட்டுக் கழுவேனோ வெந்நீரொழுகுபுலாற்
கூட்டுக் கழுவேனோ கோவே குருபரனே.
38.
மூடமனத்தோடு முற்றுஞ் சுழல விட்டுத்
தேடவொளித்தாற் சிறியேன் சகிப்பேனோ
ஆடரவப் பூணுடையாராதரிக்குமோர் குழந்தாய்
வடவிழுஞ் செச்சை யணியெந்தாய் குருபரனே.
39.
ஆங்கால மெல்லாம வத்திலளையவிட்டுச்
சாங்காலமோ நினது தண்டையந்தான் சூட்டுவது
நீங்கத்துணையே நினைப்பற்றவர் நினையே
யீங்குள்ளதுவே யென்ணெண்ணே குருபரனே.
40.
கானிருகம் பூங்கொன்றைக் கன்னியர்க்கு மோனமொழி
கோனா யெதனிடத்துங் கூடாத நின்றனைக்கு மானோர்பிடிவந்து
வாய்த்ததுவுஞ் சேயாக
நான் வாய்த்ததுவும் நன்று நன்று குருபரனே.
41.
அன்னை வயற்றுதித்த வன்று முதலின்றுவரை
யென்னகுறைவு வைத்தாய் ஏதுங்குறைவில்லை
தன்னந்தனியே தவிக்கவெனை விட்டொளித்த
இன்னவொரு குறைவுண்டு எந்தாய் குருபரனே.
42.
தேவச்சிறியபிடி சேர்ந்திருக்குஞ் செம்மலையே
காவற்புனமான் கலக்குங்கருமலையே
ஆவற்கள விளையேயையோ பெருமலையே
ஏவற்குரைத்திடுவேனினெ ந்தாய் குருபரனே.
43.
கட்டிச்செழுங்கரும்பே கட்டவிழாப் பூங்கரும்பே
துட்டர்க் கருவருப்பே சூழ்ந்தார்க்குகொருவிருப்பே
முட்டியுண்ணும் பாலே முதுமறைக்குமப் பாலே
எட்டவருபண்பே பேரின்பே குருபரனே.
44.
பற்றுங்குணமே யுட்பங்கேரு கமணமே
முற்றுஞ்சுகமே மொழியாருங்கிஞ்சுகமே
உற்றவெனக் கோருருவே பெருந்திருவே
கற்றிலர்க்குப்புண்ணே யென கண்ணே குருபரனே.
45.
அன்றைக் கொருவார்த்தை யவ்விடத்திற் சொன்னதல்லாற்
கன்று மனம் போகக்கருதி யொரு வார்த்தை
இன்று வரை சொன்னதில்லையென் செய்வேனின்னருனே
குன்றைப் பொருத குமரகுருபரனே.
46.
இட்டவிரை முளைந்தே யெப்பருவப்பட்டதென்ன     
நட்டவுழவன் வந்து நாடோறும் பார்க்கானோ
துட்டமிருகம் வந்து சோரவழித்ததிதைக்
கிட்டிவந்து காணாயோ கேனே குருபரனே.
47.
பொன்னையழித்தோமே புந்தியைத்தான் போற்றுமல்
என்னசெய்தானோ வென்ற வெண்ணமொன்று த்திலையாற்
றுன்னுபுலக்கள்வர்வந்து சூரை கொண்டாரையோ நீ
இன்ன முணர்ந்திலையா வெந்தாய் குருபரனே.
48.
வாடா மலரளிதாய் மாளாது வெங்காமக்
கோடைவந்து தாக்கிக் கூம்பக் கருகியதே
ஏடவிழுங் காந்தனணியெந்தாய் குறத்திமகிழ்
தாடா ளாவென்றவமே சத்தே குருபரனே.
49.
மானும் பிடியுமகிழ்ந்தணையும் பூங்காவே
தேனுந்தினை மாவுந்தேக்கவுண்ணு மென் கோவே
வானுமுலகும் வணங்கும் பெருந்தேவே
யூனுமுருக வருமொன்றே குருபரனே.
50.
இந்தீவரமே யெளியேன்ற னதரமே
செந்தீயின் வண்ணா தேவர் சிறை மீட்டவண்ணா
தந்தி முகர்க்கிளையாய் சாகுஞ் சமர்க்கிளையாய்
நொந்தீடழிந்தேனே நோக்காய் குருபரனே.
51.
உத்தமர் கட்கோது மிடத்தோதினையா லென்றனக்கோ
இத்துணையுமுற்ற பலனின்னதென நானறியேன்
மத்த மதியினனோ மந்தனோ வாயிலியோ
யெத்துணையானோ வறியேனெந்தாய் குருபரனே.
குருபராபரணம் முற்றிற்று