|
கழுதைக்கண்ணி
|
|
|
ஜெகதீசனுடைய
திருமந்திரத்தை
|
|
|
ஜெபியாதவனொரு
கழுதை
|
(1)
|
|
தேடிப்புதைத்து
வைத்துண்ணூமற்
|
|
|
றிரிபவனொரு
கழுதை
|
(2)
|
|
சுகமேவடி
வாம்பரமசாதுக்களைத்
|
|
|
தூசிப்பவனொரு
கழுதை
|
(3)
|
|
சுருதியினெறிதனையுணர்ந்து
மதில்நிற்கத்
|
|
|
துணியாதவனொரு
கழுதை
|
(4)
|
|
அகத்தினிற்
பெண்டீரிருக்கப்பிறநாரியை
|
|
|
யணைபவனொரு
கழுதை
|
(5)
|
|
அனுதினமும்
பலஜீவஹிம்சைசெய்
|
|
|
தருந்துபவனொரு
கழுதை
|
(6)
|
|
|
|
|
அகத்தினிற்
பரசிவஞ்சாக்ஷியாயுண்டென்
|
|
|
றறியாதவனொரு
கழுதை
|
(7)
|
|
அரிகதை
சிவகதை மகிமைகளறியா
|
|
|
தலைபவனொரு
கழுதை
|
(8)
|
|
தகதகவெனவேயாடுஞ்
சிற்றம்பலந்
|
|
|
தனைத்தொழாதவனொரு
கழுதை
|
(9)
|
|
சந்ததமுகங்காரமே
வடிவாய்ச்
|
|
|
சஞ்சரிப்பவனொரு
கழுதை
|
(10)
|
|
இகமேசதமெனப்
பரத்தினைமறந்துபோ
|
|
|
யிருப்பவனொரு
கழுதை
|
(11)
|
|
எல்லார்க்கும்
புத்திசாலித்தானடங்காம
|
|
|
லிருப்பவனொரு
கழுதை
|
(12)
|
|
மகவுமனைவிமுதற்
சொற்பனமேயென
|
|
|
மதியாதவனொரு
கழுதை
|
(13)
|
|
மதியற்றே
மதுபானங்களைப்பண்ணி
|
|
|
மயங்குபவனொரு
கழுதை
|
(14)
|
|
முகத்திற்கண்ணிருந்தும்
பிறர் துக்கமறியா
|
|
|
மூடனொரு
கழுதை
|
(15)
|
|
முற்றிலுந்தான்
கண்டநிலைதன்னினில்லா
|
|
|
மூர்க்கனொரு
கழுதை
|
(16)
|
|
கல்விகற்றதெல்லாம்
பரத்தையுணர்தற்கெனக்
|
|
|
காணாதவனொரு
கழுதை
|
(17)
|
|
கனவானெனத்தன்னைத்தானே
மதித்திடுங்
|
|
|
கதியிலியொரு
கழுதை
|
(18)
|
|
குருசொன்னமந்திரந்தனை
விற்றுப்பிழைக்குங்
|
|
|
கொடியோனொரு
கழுதை
|
(19)
|
|
குற்றமதனைத்
தள்ளிப் பார்க்குந்தந்தையைத் தள்ளுங்
|
|
|
கூரற்றவனொரு
கழுதை
|
(20)
|
|
பொதுவாய்ச்
சொல்வதைத் தனக்கென்றபிமானித்துப்
|
|
|
புலம்புவோனொரு
கழுதை
|
(21)
|
|
புண்ணியபாவந்தெரியாதேகாலம்
|
|
|
போக்குவோனொரு
கழுதை
|
(22)
|
|
கழுதைக்கண்ணி
முற்றிற்று
|
|
கழுதைக்கண்ணி
Subscribe to:
Comments (Atom)