திரு ஆசிரியவிருத்தம்



திரு ஆசிரியவிருத்தம்


1.
பூமருவு தருநிழலிலுரகர் புவியரசர்வரை புரையவுணர் யாழ்வலத்தோர்

   பொற்சுணங்கணி முலையை மருவிவளர் போகர் பலர் போற்றிசெய போற்றியென்னப்
பரமருவுமினிய சொல்லெழு பருவநலனுதவுபதுமையெனு மிந்திராணிதன்

   பணைமுலக் கோடுதோய்ந்தோயாது செம்மையாம் பவளாசலப் புயத்திற்

காமர்வண்டிசை பாடு மந்தாரமாம் புதிய கண்ணிவேய்ந்தாசி கூறக்

   கனகவரியாசனமீதில் வாழ்பவன் வாழ்வு கனவினுமினிய தென்னாக்

கோமளமதாகுமோருணர்வு தந்தாண்டவா குணரூபவல்லியெனு மோர்

   குறமகளினொடு மியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


2.
இடையறாதுருகியிருவிழிநீர்பெருக்கி நிதமெந்தையே யென்னம்மையே

   யேகமே யன்பினுக்கெளியதே யென்று சொலியிசையோடு தமிழ் மாலை-சொற்

றுடை நெகிழ்ந்ததுமெணா திருகை கூய்யிப் பரவுமுன்னடியர் தன்னடிக்குள்

   ளுணர்வு கெட்டலை கின்றவடியேனை விலை கொண்டுமுன்றிருக் கருணைவெள்ளம்

விடைகொடுத்தூழியங்கொள்ளாது தன்னரசை மேவச் செய்திரவுபகலாய்

   வெம்பேயெனத்திரிந்தரிய பவமொரு கோடிவினைபுரிய விட்டதேன் பொன்

கொடைகொடுத்தடுமை கொளயெது குறித்தோதிடாய் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


3.
நரியெனக் கொன்றோத நாயெனக்கென்றுசொல நத்திவருசெந்நாயினம்

   நடுவுடம்பெமது கூறென்றிசலமாண்டு வெடிநாறுபிணமாமுடம்பைக்

கருநிறப்பாசக்கடாவுந்து வஞ்சகன் கண்டித்து விட்டெறியுமோர்

   கட்டையைத்தூக்கிச் சுமந்திடென விட்டதே கடிய கொடியதாயிருக்கப்

பெருகவூண்பிணிமருந்தாடை பூணிவையெல்லாம் பேணிக்கொடுத்து நித்தம்

   பேரிழவுகொண்டாடி நொந்திடவும்விட்டதேன் பேசொணாமுடிவு பேசக்

குருவாய கடவுளே யானிதற்கருகனோ குணரூப வல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு  மேவுகுமரகுருபரநாதனே.


4.
தத்தைமொழியார்மயல்கொள் ரூபமுமலர் நன்றுச்சால நன்றென்றுகூறச்

   சந்ததம் பேசி வருமின் சொலுஞ்சங்கீத சாகித்யத்தில் வல்லோன்

உத்தமனெனச் சொலச் செய்கோலமுஞ்சபையிலுன்மத்தமாய் தங்கினோர்

   ஒப்புவணமாசுமதுரஞ்சித்ரவித்தார்மோதி வருவீண்டம்பமுனு

சத்துவகுணம்பெறும் நீன்னன்பர் போற்செயுஞ்சாலமு முள்ள பிறவும்

   தண்ணனிதுதைந்து தத்தெய் யெனப்பாடி டுந்தனிவெட்சி நீ பங்குராக்

கொத்தலரு நின்பதங்கொண்டு தரவல்லவோ குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


5.
எப்பொழுது மெங்கு நிறைகின்ற பொருளாமுன்றனின்னருளை நாடிவசமா

   யெந்தையே யென்று ருகியதனையகவிகள் சொலுமியல்புற்றிருந்துமின்னங்

கைப்பாசம் விம்குறக்கட்டிப்பிடித்தெமன் கையாரவாரி வஞ்சக்

   காதகா வாயையங்காவெனப்போடுங் கனற் பொறியை யுண்ணலுமூன்

றப்பதே நாடும் விதிகைப்பொறியை யுண்ணலுந்தாய்வயிற்றோர்கருவதாய்த்

   தங்கிக் குரங்கு போற்குந்திவெந்தொன்று காற்றள்ளுண்டிடுக்குண்டிவண்

குப்புற்று வீழ்தலு நலமதோ கூறிடாய் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


6.
வாய்கொண்டுநன்னெறிகள் கூறவும் பேரின்பு வந்தாய் விவரிக்கவும்

   மனமுருகலில்லாத சிலகவிகள் கலகலென வந்தமட்டுக்குமெழுதிப்

பேய்போற்பிதற்றவுமுணர்ந்ததல்லாதுனது பேரருளைநாடி நிலையிற்

   பிரியாது நிற்கும் வழியாதொன்று முணர்கிலாப் பேதையேன்றன்னையன்பாய்த்

தாயனையகருணை வைத்தாண்டுநிகழ்சமயங்கள் தன்னதிங்கொன்னதென்னத்

   தர்க்கமிடநடைபுரிந்தருண்மறையின் முடிமீது தங்குநீயென்றறுள்ளங்

கோயிலாக்கொள்ளலெவ்வண்ணமோவறிகிலேன்குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


7.
நிலையிலாதனவெலாங் கற்பாந்தகாலத்து நிலைநிற்பதாக வெண்ணி

   நெஞ்சூடழிந்து கெடுபாழுலகர் நடையெலா நீதிநெறியற்றதென்றுந்

தொலைவிலாவானந்த முதவநன்னெறியுண்டு தோய்ந்திடிலெலாந்தன்னதாய்த்

   தூக்கியுண்டிலகுமென்றினியநல்லுணர்வொன்று தோன்றிடச்செய்தகருணை

மலையாகியனையிலாக்குழவிபோலமுற்றுமனதீடழிந்து புண்ணாய்

   மாறாது விழிநீர்பெருக்கியழுதோய்ந்துவருமரணத்தையெண்ணியெண்ணிக்

கொலைபுரிந்தவர்போற்றிடுக்கிடச்செய்வதேன் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


8.
அஞ்சுமுகமின்றியிங்காறு முகமாயிலகுமன்னையேயிற்றைவரையும்

   அங்கங்கலைந்ததிற்கற்றசிலசொற்களையடுக்கியொர்பாமாலையாய்க்

கஞ்சமலரன்னபொற்பாதமிசை சூட்டிக்கருத்திற்கிசைந்தகதியைக்

   காணலாமென்றுனத்தெண்ணினேன்பேதையேன்கருணைகொடுமுற்றும்வரையும்

வஞ்சமடமடியிவைகளணுகாதுசெய்வித்துவரவுபோக்கற்றநிலையோர்

   மதுவுண்டவண்டெனத்தூங்குசிவயோகர்பலர்வதியுமின்னருணிழற்கீழ்க்

கொஞ்சுமொழி மதலையாய்வாழச்செய்யையனே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


9.
ஆராதவழுதப்பெருங்கருணைவாரியுண்டன்னதே வலியவந்தாண்

   டருமறைகள் வாயெடாவீட்டினுக்கோ ரொளியதாக்கிவைத்திடுமிதற்காய்

வாராத சொலையெலாமவர வழைத்தோயாதவல்வழக்கோதி நித்தம்

   வாடலேன் பிறர்கள்போராடவேன் என்னவொரு வலியதாயுணர்வு மட்டுங்

தீராது திக்கின்ற தல்லாது மேலோர்கள் தேர்ந்தெழுதிவைத்த நூலை

   தேடவாவோர்வழியைநாடவாகனவிலுஞ் சிந்திக்கு தில்லையேயிக்

கோரநிலையுற்றயான்வாழ்வதெவ்வகைசொலாய்குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடு மியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


10.
இந்த வழி போயினாலினியசுகம் வெருமென்றுமின்னபடிவாழ்த்தி நின்றல்

   இலகு நின்றிருவுள்ளமாமென்றுமறிகிலாவேழையேன்னவாவோ

பந்தம்புகுந்திடவொணாதென்றுமேலாம்பரானந்தவாரிமூழ்கிப்

   பரமசுகமனுபவத்திடவேண்டுமென்றும் வெம்பவமகலவேண்டுமென்றும்

அந்தமில்லாதெண்ணிவருகின்ற பேராசை யாளனிவனென்றுள த்தில்

   அனுவளவு கருதிலோவுய்கு வேனையனை யாதரவுபற்றிநிற்கக்

கொந்தலருபாத நிழலல்லாது வேறில்லை குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


11.
காவிமலர்வேளைத்துணைகொண்டு நாடாளுகாதிகிகள்பாழ்ந்தோசிகள்

   கண்மயக்கிலுநாறு புண்மலக்கிலு நிதங்கட்டுண்டுவாழுவண்ணம்

பாவிவினைசெய்து வரவுசிதமாகடவுளே பஞ்சுப்பொதிக்குலங்கள்

   படுநீறதாக்குமொருதீப்பொறி முன்னிற்குமா பழவினையைவேரறுத்துத்

தூவுபொடிநுறதாக்கிடுமுன்னதருள்விழிகள்சும்மாவிருப்பதல்லோ

   தொண்டர்நிலைவழுவாது காத்துரியபேரின்புதோய்ந்துசுகமாகவெதிராய்க்

கூறிவருநற்கருணையெங்குற்றதெந்தையேகுணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


12.
ஓடாது கால்களைமுறித்து விட்டிடுமந்தவொய்யிலான்பேரருளென

   உள்ளத்துளஞ்சியே யென்கொடியமனமானதொன்றிநிற்கின்றநிலையே

ஆடாத கூத்தெலாமாடிடுமெஞ் ஞானியவனென்ன சிறியனென்றும்

   அண்டயோகர்சில யோகரிவரெலாமோர்வழியும்றியாதபேர்களென்றும்

தேடாது நிற்குநிலையாமறிவமென்றிடுஞ்சிவலோகவைகுண்டநற்

   தேவருலகயனுலகமிங்குண்டுமென்றிடுஞ்சித்தறிவமென்றமின்னல்

கோடானகோடி வினைசெய்தி மட்பனே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபர நாதனே.


13.
நீதிதவவிரதநெறிபலபூஜைநித்யஜெபநித்யானந்தநிஷ்டை

   நேடுதற்கணுமளவு நெஞ்சமிசை யாததானித்ய மன்றேயிச்சடம்

வாதநமன்வருவனேயென்னவோர்ந்தன்ன பவம் வாராது பலகவிகளை

   வாய்கொண்டுசொல்லியாகிலும் வாழ்வமென்னவேமனமனத்தின்மிக கெண்டை முற்றேன்

சோதியேயக்கவியுபுநின்னதாய்விட்டபின்னோத்திரமும்நின்னதாகத் கெண்ண முற்றேன்

   தோன்றுகின்றனவினி பாழ்வினைக் கொடியயேன்றுன்புற்றுமாண்டிடாவோர்

கோதிலாவாழ்வுபெறலெவ்வண்ணம்றிகுலேன் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


14.
ஒரு கணத்தண்டங்களியாவையுங்கண்டுபின்னொன்றென்றுமில்லையென்ன

   ஒப்புவமையற்றிலகுசுகவாரிநல்லன்பருள்ளமாங்கமலமலரின்

மருவாகியதிலூறுமதுவாகியதிலுள்ளமதுரமதுவாக்கியத்தை

   மறந்தவனுமாகுமோர் மெய்க்கடவுளென்னநின்வளனெலாந்தேர்ந்திருந்தும்

திருவிலார்போனித்தம் வீணுக்குழைத்திடச்செய்வித்துநீதிநெறியைத்

   தேடுமெய்யன்பராமன்ன குழாத்தினுட் செயலற்று வாடியோர்வெண்

குருனெத்தூங்கிடவும் விட்டதே னெந்தையே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


15.
உலகோரெலாஞ் செல்வதின்றுவரை கண்டதிலொரேவழிதாயிருக்க

   வுன்மத்தனிவன்மட்டு மென்னவோ வேறுவழியுண்டென்றுமதி னடந்தால்

அலகிலாவாழ்வுபெற்றுய்யலாமென்றுமிங்கசையாது சொல்வதென்ன

   அப்படிக்குண்டுமா சொல்லுநீர் சொல்லுமெனவங்கங்கு கூடிநின்று

பலரேச வின்றுவரையான் கண்டதல்லாது பரமார்த்தமேதுகண்டேன்

   பாவியேனொரு கோடி சொன்னாலு நின்னருள் பழுத்தொழுகவந்துளத்திற்

குலவிநின்றாண்டிடவுமில்லையென்செய்வேன் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


16.
அறியாதபேதையிவனானாலுநமதருளையணுவிலுமறக்குகில்லா

   னாதலாற்பழவினையைமாற்றியாண்டிஉடுவமெனுமன்பொன்றுசெய்வதுண்டே

லுறவதாயுடல்கொஞ்சநாள்வரைக்கு நிற்கு மொப்பிடா யென்னிலோவூன்

   உருசுநொந்துனைநாடிவெந்து வெண்ணீறதாயொருபலனுமின்றிவிணாய்த்

தறையின்மாள்வதுமன்றியின்றுவரையுஞ்செய்தசலியாவினைக்கிடதாய்ச்

   சரம்பலவசரமதாய்த்தோன்றியே பலகோடிதரம் மாண்டுமாண்டுமிக்காங்

குறைவதே நேரிடவுமேதுவாமையனேகுணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.


17.
பாபவினை வாரிதியன்முக்காலமென்னுமோர்பாழலைகள்வந்துமோதப்

   பம்மூற்றெழுந்துலைந்தோர்பற்றுமின்றிவெம்பாம்புண்ணுதேரைபோலாய்த்

தாபமுனுபேதையேன்றன்னைவாவெனத்தன்னருள்விரைந்துகூவித்

   தாவிதேபற்றனப்பற்றவைத்துதெங்கணுந்தானாகியென்னும்வீயாத்

தீபவொளிவீட்டிலோர்குடியாகவையாது செகவரசர்மெச்சுவண்ணம்

   செக்கான்வளர்த்தவொருபேரெருதுபோலித்தேகச்சுமட்டையேற்றிக்

கோபமெனுமூன்றுகோலாலலையவிட்டுதென்குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.


18.
தடைவரையின்முடிமீதிலசைவற்றுரோமங்கள்சடைகளாய்த்தினைமுனைத்த

   தருவின்விழுதென்னவீழ்ந்திடநின்றுமான்மறைகடங்குமிகுகங்களெல்லாம்

படருமோர்தருவென்னமெய்யுரசமெய்த்தபசு பல்லாண்டுசெய்து வேண்டும்

   பரகதியையோர் தவமுமுயலாதபாவியேன் பாடித்துதித்து வேண்டன்

முடமுற்ற சண்டாளன் முடிமன்னன் மகண்மீதுமோகமுற்றேங்கல்போல்

   முடிகின்றதோவலது முற்றுபெருகின்றதோமூடனேனியாதுமறியேன்

குடியுற்று மெய்யன்பருளமேவு மெளியதே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


19.
ஓருணர்வுமில்லாத வெறியாளனொரு பேயனுன்மத்தனென்று பலபே

   ரோடித்துதொடர்ந்து கைக்கல்லெறிங்தோட்டிவரவூள்ளணர்விலேஎழுந்திட

பாராதியறியாத பேரருளை யோயாது பாடித்துதித்து வாழ்த்திப்

   பகலிரவு தெரியது வாழ வெண்ணிடுமெனைப்படுமுடவனாக்கி யென்றுங்

கார்நிறக் குழன்மனைவி மக்களெனும் வலையினு கட்டுணடிருக்கும் வண்ணம்

   கற்பித்து விட்டதேனெந்தையே யித்துயர்களைந்திடகோடிவிதநான்

கோரியுந் திருவுளஞ்செய்யாத தன்மையேன் குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடு மியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


20.
வேதனெனு மொருபாணனீரல்குடர்நிணைமூளை வெள்ளென்புதசையிவைகளின்

   மீதுசெந்நீர்ப்பதந்தோய்ந்திட்ட ஒருவண்ண வெந்தோலையிட்டு மூடிப்

பாதமுதலுச்சீவரை வெண்ணரம்பாமினழகன் பம்பவுட்டையல்தைத்துப்

   பாலிடும்பாவையைச்சூலென்னுமொருபாவிபலதரமூடி மூடி

யேதமொடு தொய்வுனுப் போர்வையை வார்த்தீகமென்னும் வண்ணான் வெளுத்திங்

   கீகின்ற சாயப்பழங்கந்தையை தினமுயிணையிலாவின்னமுதமே

கோதையேயென்று வரலொழிவ தென்றையனே குணரூபவல்லி யெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குருபர நாதனே.


21.
காண்பனவெலாமித்தெ மெய்யான தொன்றுண்டு கருவிகரணங்களெல்லாம்

   கால்சடைந்தோய்ந்தந்த மயமாகுமலையிலாக்கருணையங்கடலதென்ன

மாண்புடையவோருணர்வு பெற்று மோர்நிமிடத்தின் மாறிமாறிச்சுழன்று

   மையலுறுமுலக்ரோடொயித்திரிந்துவரல்வன்பாவமென்னையனே

சேணண்டமியாவிலுந்தானுகவாழுமொருஜெயபக்ஷியைப்பிடித்துச்

   சிறுகுரம்பையிலிட்டு நாடிமொழிபேசிச்சிரித்து விளையாடிவருதல்

கோணிலாப் பொருளினியல்பன்னுகாதெய்வமே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


22.
ஒருவேளையென்னுள்ளினீவந்தை வந்தை யென்றேதியானந்த மாகி

   யுடலெலாம்புளக மெழநிற்கின்ற வொருவேளையொன்றுமில்லாதுசும்மா

வருவனோ வருவனோ வென்கின்ற வொருவேளைவரவினைக்கண்டிலேனே

   மாபாவியென்செய்வனென்றுருகியழுகின்ற மற்றுமொவ்வோர்வேளையி

லிருகால்கள்கைகளிடையோய்ந்துடலும்நீங்குதற்கேற்றவோரயர்வுதுன்ப

   மீகின்றதிவையெலாமின்னபடியென்னுதீயெளியேனையானும் வண்ணங்

குருவாகவரினலான்முடியாதுதெய்வமேகுணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடு மியானைத்தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


23.
அலகிலியாவரும்பகலிலுண்டிரவிலுண்டஞ்சற்றுரங்கியப்பால்

   அவரவர்கள் தொழிலெதோவதை நோக்கியுள்ளத்தினமைவடைந்தானந்தமாய்க்

குலவிடச்செய்தநீயென்மட்டுமோரமைவுகொள்ளவொட்டாது செய்து

   கொடிதவர்கள் நடையெலாம் பொய், பொய், பொய் மெய்யான கோமளமதானநடையி

லுவிநின்றிடவேண்டுமென்னவோருள்ளுணர்வை யோயாதளித்து வாய்கொண்

   குளறி நின்றுருகும் வணம்விட்டதே னெந்தையேயுல கோரெலா நிகைக்கக்

கொலைபுரிந்தவனாக வாழ்ந்து வரனன்றன்னு குணரூப வள்ளியெனுமோர்

   குறமகளினொடுயொனைதருமகளினொடுமேவுகுமரகுருபரநாதனே.


24.
எல்லா நடத்துபவனுமெப்பொருளுமெத்தேவுமியாவுநீயாயிருக்க

   விதையணுவிலுணராதுநான்சொன்னகவியென்றுமிவையெனது பொருள்களென்றுங்

கல்லாலினீழலி தருள்தவன் விடையேறு கர்த்தன் முராரி முதலாங்

   கடவுளர்கள்வேறென்று மாறுதலமே நினது கருணைபெறுதலமேதென்னும்

பல்லோருமறியும்வணமோதினேனின்றுவரைபாவியேனாற்றிவந்த

   படுபிழையெலொம்பொறுத்துள்ளுணர்வின்மானாதுபாடச்செய்தன்பிரக்கங்

கொல்லாமை, பொறையுடைமைதந்து காவையனே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடு மியானை தருமகளி னொடுமேவுகுமரகுருபரநாதனே.


25.
ஏனிங்கு வீணுக்குழைக்கின்றையிடையிடை லென்னவோ வொன்ருண்டுமென

   னெட்டிப்பிடிக்க வொரு பறபறப்புற்றையதையெய்தவொட்டாதுசெய்தோ

நானென்பதறியைநீபின்னுமவ்வழியையேநாடுகின்றாய்நடக்கா

   நானுள்ளமட்டுமென்றோதிமனமென்னோடுநலியாதுபோராடுதே

யானிந்தவல்லலுக்காளன்று நடுவற்றவிச் செய்திகூறுனத்தை

   யென்றுமில்லாது செயவில்லையேயகிலாண்டமெங்குஞ்சிறந்துமுறைசெய்

நோனென்ன நினையோதல் பொய்யதோ மெய்யனே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


26.
அறியாது தேகமே நானென்று பலரோடகம்பேசி யிம்மனதினோ

   டங்கங்கலைந்து பவவினைதோடி செய்ததனை யாராய்ந்து முடிவிட்டதிற்

சிறிதெனினுநின்கருணைபற்றிடாதென்னவே தேக்குற்றனிப்பொழுதிலோ

   சிலவுணர்வை யணுவளவதாயுதவி வலுவினிற்றேடி யாட்கொள்ளுமன்பிற்

செறியுநீமெள்ள மெளவருதலுஞ்சேர்தலுந்தேர்ந்து கொண்டேனிது முதற்

   றினையளவுமஞ்சுறேனீயாளுவாயெனச் செயிடற்கையமுமிலை

குறிகுணஞ்சோதிக்கவேண்டுவதுமில்லையாங்குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


27.
மெய்யானகடவுளுனையொரு நொடியுமறவாது மிருதுவசன நிறைத்து

   மென்கவிகள் சொல்லித்துதித்துருகியண்டினர்கள் வெம்பொய்யினூடுபுகிச்

செய்யாது செய்து வரவுசிதமாவாதநோய்தீரலொருபேதை நெடுநாட்

   டேடிக்கிடைத்தவோரருமருந்தினையுணதீனமுன்னிலுமதிக்கமாய்

கைகால்முடங்கிவரவேற்றதா பாலைக்கரும்பனையினடியிலுண்ணிற்

   கள்ளென்பரல்லாது பாலென்று சொல்வராகர்த்தனே கருணைகொடு யான்

கொய்ச்சிறைப்பற வையாமுன்னமேவந்துகா குணரூபவல்லியெனு மோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


28.
பாடானமுண்டதிற்புழுவுமுண்டன்னதின்பண்பாகலாமென்னிலோ

   பாழுலக மாயை யிதுபொல்லாது வெம்பணிகள்பந்து பந்தாய் சுருண்டு

வாடாது வாழ் சந்தனத்தருவை நிகராக்கும் வலுவிற்ற மிதவை சேர்ந்த

   வன்கல்லுமாக்கிவிடுமிசையாதுநல்லதெனவாய்கொண்டு சொல்லினாலு

நாடாது பேதையுண்ணடுநடுக்குறுகின்ற நாதாந்த முடிவினின்று

   நலிவினொடு வரவு போக்கற்று மெய்ஞ்ஞானத்தினற்போக வாட்சிபெற்று

கோடாநு கோடியர்கள் வாழுநின்பதமுதவுகுணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபர நாதனே.


29.
அத்திபூத்ததுபோல வொருவேளை யென்னுள்ளமழுது மோரயர்வு காட்டி

   மலறுவதெலாஞ்சுத்த வேடமேமெய்யாகிலங்கிங்கெணாமலெங்கு

நித்தியமதாய் நிறையுமொளியதாய்த்திருவுள்ளநேடியிவனன்பனென்ன

   நிகரிலாவாழ்வுதவழில்லையெனிலண்டும்வகைநேராய பாதை காட்டிப்

பத்திமுதிரச்செய்யுமதுவுமில்லாவிடிற்பாவினை கோடி தேடும்

   பாழ்மலமதாந்தாளைத்துண்டுதுண்டாக்கிப்படர்ந்துவருவேரையெல்லாங்

கொத்தியழன் மூட்டியே வாழச் செய்யையனே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடுமேவு குமரகுருபரநாதனே.


30.
வஞ்சமனமென்னுமோர் மாபாவிராவுத்தன் வன்புலக்குதிரையேறி

   வையாளி விடுகினான் சற்று, நில்லென்னிலோவசமாகுவாறுமல்லன்

அஞ்சாமலொருவேளை யென்னையும் போவென்றுதட்டுகின்றான்பேதையே

   னனுதினமுமோயாது போராட முடியுமா வஃதோதும் வல்வழக்கை

நஞ்சுமிழனந்தனாவாயிரமு மிரவு பகலியாது பேசியற்று

   நடுவின்னதிந்தவழிநீர் போகலாமென்று நவில நாற்கோடியாண்டுந்

கொஞ்சமேயென்செய்வனையையோ தெய்வமே குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


31.
தேகநமதெக்காலு மழிவுறாவயிரமலைசிதைவுறாதென்றுபொன்னைத்

   தெய்வமாய்த் தொழுது வருசிற்றறிஞர்பாலுனது சித்தெலாஞ்செய்தலுசித

மாகுநரிநாய் கருகு செம்பருந்திவையெலாமவ்வளவவ்ளவதா

   யாக்கிப் பகிர்ந்துண்ணுமுடலைநமதென்றெண்ணுமறிவிலாச் சண்டாளனை

மோக முற்றவர்போலமருவிவருவேசையரின் முறையிலுந்தாழ்ந்தமுறையா

   முற்றிலுங்கொண்டதிப்பொன்னென்று மெண்ணுமென்முளமோன முற்று நிற்றல்

கோகனகமதிலூறுதேரலேயுசிதமா; குணரூபவல்லியெனுமோர்

   குறமகளினொடுமியானை தருமகளினொடு மேவுகுமரகுருபரநாதனே.


திரு ஆசிரியவிருத்தம் முற்றிற்று