கழுகுமலைப் பதிகம்

கழுகுமலைப் பதிகம்
பாடல் கொண்டது மெய்பரமாபரமெனும் பகுப்பறவையென்னுள்ளே
கூடல் கொண்டது மெய்யிவை கிடக்கவொருகுணனுமற்றநெடுவுலகையே
நவடல் கொண்டுழலவைக்கு மாயைவலிநன்று நன்றிதனில் நாயினேன்
வாடல் கொண்டு வரல்தர்மமோ கழுகுமாமலைப்பெரிய மன்னனே.
1
காமனைப் பொடி படுத்தவோர் பரமனுதவு கந்த கழுகாசலா
வேமனைப் பகைதடிந்த வென்றனிடம் வெருகுறாதெவர்கள் கவருவார்
சாம நல்லிருளில் மெல்ல வந்தினியசரசமாகவெனையெண்ணியென்
சோமனைக்களவு செய்த கள்வனினையல்லதில்லையிது துணிவதே.
(காயும் படை)
2
வெள்ளக்கண்ணீர் பெருக்கியுரைவிம்மிவிம்மி நாக்குளறி
வள்ளமுலைப்பால்குடிப்பானாய் மடிதொட்டிழுக்குமொருபசலைப்
பிள்ளைதனைக்காலாலுதைத்துப்பெயர்ந்தெங்கேனும் போவென்னத்
தள்ளிக்கடிதனீதமதோஷண்முகேசப்பெருமாளே.
(வெண்பா)
3
வெற்றிவேலென்ன விளம்புகின்ற நாவினீர்
வற்றிப்புலனவியமாதரெல்லாஞ் சுற்றியிருந்
தையையோவென்னவழுதுபறையறைய
வையகதே வைவேலவா.
4
மிக்கிரவாய்ப்பெயல்காலாய் பெரும்பாராய்ப்பலமாயம் விளங்கக்காட்டும்
விக்கிரவாவெனச சூறை விளித்தரியவுருக்காட்டி மேற்காணென்ன
வுக்கிரவாளயினொடுத்த செந்திலெம்பெருமானையுவம்பினோடுஞ்
சுக்கிரவாரத்தினத்திற்கண்டலம் புழகமெழத்தொழுதிட்டோமே.
5
கும்பபாரமுலையாவலற்றுரியகுணணுமற்று நிருவாணியா
யும்பராருமறியாத பேருணர்வினுருவதாயுலவலெந்தநாள்
செம்பராகமுதிர் குழன்மறச்சிறுமிசேவகாவயில் கொள்செம்மவே
யெம்பராபரமென்னுள்ளானே வளருமேகமேகுமரபோகமே.
(வேறு)
6
குயில் போலுங்குறச்சிறுமி கூடிநிற்குங்குலக் கொழுந்தே
யயிலேந்து தென்னமுதே யன்புருவே செந்திலாய்
மயில்போலு மரய மின்னார் புணர்ப்பாலே மதி தளர்ந்திங்
குயிர்போகாவுடலாகிப் பதைக்கின்றேனுடையானே.
7
குவலயம் போற்றிடும் குமரா செந்திலாய் சக்தத நான் குடும்பங்காக்குங்
கவலையதாற் பெருந்துயரப்படப்படுமாநின்னதருட்கருணானந்தத்
திவலை பெற்றோர் பெறு சுகத்தைச் சொல் லெனிதோ சிறியேன்பாற் செறிந்து நின்ற
நுவலரியதுயரமெல்லாந் தீரவட்டிரு நோக்க நோக்கிக்காவே.
8
தேம்போதனைச் சிறையிட்ட செவ்வேலனைச் சேவகனை
யாம்போது வாழ்த்து கில்லீர் புலவீரினியாயுளற்றுப்
போம்போது போமென்ன வீடோதக் காடுபுறப்படென்னச்
சாம்போதிலோவுடல் ரீவம்போதிலோ கவிசாற்றுவதே.
9
அம்புராசி கெடவயில் விடுத்த நமதறு முகப்பரமனடியையே
நம்புவார்கள் பெறு பேற்றினைத் தெளிய நாமறிந்தபடியோதுவா
மிம்பரும்பரென மயல் களற்ற விருவினைகளற்ற குறியேதுமற்
றெம்பரம்பொருளிதெனலு மற்றவொருயிணைலிலாப்பெரிய நிலையமே.
10
அலமிகுந்தவறிலாமை யெனு மனுபவக்குழியிலாழ்ந்துன
சிலர்கள் போனமது குமரனாதனடி சேர்ந்துளார்களறவில்லையாஞ்
சலனமற்ற ஜெகஜீவபேதமுளயாவையுந்தனது செயலதாய்த்
தலநிறைந்தபடி கண்டு நிற்பர் நமதுளமறிந்ததிது சரதமே.
11
மனைகட்டவும் பெண்மணஞ் செய்யவும் பொன்வளர்த்திடவுந்
தினையத்தனையுமெய்யில்லாதபொய்யை மெய் செய்திடவும்
நினைவெட்டுமட்டுநின்றராய்வர்நள்வழிநேட வென்னில்
வினையொட்டுதில்லைஎன்பார்நடபடாதென்றும் வேலத்தானே.
எங்கே நடத்துமோ எங்கே கிடத்துமோ எங்கேயிருத்து போவென்
கங்கை மதி சூடினான்தில்லைதனிற்றெந்தோமெனநடனமானாறறியேன் னெங்கோனருள்.
கழுகுமலைப் பதிகம் முற்றிற்று