|
மருதுறைப்பதிகம்
|
|
|
1
|
நாதமுங்கடந்து
விந்துவுங்கடந்து நாமதுவாயினமெனுமோர்
|
|
போதமுங்கடந்தோய்
செழிய வைகுந்தப்புனிதனே மருதுறைவானே
|
|
|
ஏதமே
பெருக்குமிக்கொடுவாழ்வையினிதினிதென்னவே நத்தி
|
|
|
வேதனை
பலவும் விளைத்திடவல்லேன் எவ்வணமுய்வண விளம்பே.
|
|
|
2
|
புத்தமுதனைய
மொழிமறச்சிறுமிபுயாசலந்தழீஇக்கொள்வளரும்
|
|
மத்தனே
மறையோர் நிகழும் வைகுந்த மன்னவோ மருதுறைவானே
|
|
|
தத்தை
மென்மொழியார் காமுறப்பவநோய் தழைவுறச்சந்ததமாய
|
|
|
வித்தையே
பயில்வேனானொ ருபேதை யெவ்வணமுய்வணவிளம்பே.
|
|
|
3
|
செய்வராலினங்கள்
கமுகினந் தாற்றச்சிதறி வெண்ணறவினையொழுக்கி
|
|
மைவரம்
பொழிலூடுலாவு வைகுந்த மன்னவோ மருதுறைவானே
|
|
|
ஐயமொன்றின்றியாணவவிருணின்றகண்வாழ்வதினிலை
மன்னா
|
|
|
வெய்யனேன்
வெகுளி யோடலைகின்றே னெவ்வண முய்வணவிளம்பே.
|
|
|
மருதுறைப்பதிகம்
மூன்று பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது
|
|
|
மற்ற
பாடல்கள் கிடைப்பின் பதிவேற்றம் செய்கிறோம்.
|
மருதுறைப்பதிகம்
Subscribe to:
Comments (Atom)